நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் 40வது போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த விதம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
டெல்லி லக்னோ மோதல்
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 33 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் 45 ரன்கள், பதோனி 21 பந்துகளை எதிர் கொண்டு 36 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே லக்னோ அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட டெல்லி அணி 17.5 ஓவரில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 161 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் பொரேல் 36 பந்துகளை எதிர் கொண்டு 51 ரன்கள் குவித்தார். பின்னர் மூன்றாவதாக கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 42 பந்துகளை எதிர் கொண்டு மூன்று பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர் என 57 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
தோல்வி குறித்து ரிஷப் பண்ட்
தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது “நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று எங்களுக்குத் தெரியும். இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. லக்னோ ஆடுகளம் இப்படித்தான் இருக்கும். யார் டாஸ் வென்று முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு ஆடுகளத்தில் நிறைய உதவி கிடைக்கும். இதனால்தான் நாங்கள் பின்வாங்க வேண்டி இருந்தது, மேலும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் போது ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். லக்னோ ஆடுகளம் பொதுவாகவே இப்படித்தான் அதனால் இதனை குறை கூற முடியாது. மேலும் இங்கே எதுவும் காரணம் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை.
இதனால் தான் இம்பாக்ட் பிளேயராக ஆயுசை அனுப்பினோம். மயாங்க் யாதவ் தன்னை அணியில் பொறுத்த வழிமுறைகளை தேடி வருகிறார். மேலும் சீசன் ஏற்கனவே பாதி முடிந்து விட்டது. என்சிஏவில் இருந்து அவர் வந்தாலும் அவரை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்துதான் நாங்கள் சமாத்தை முன்னரே அனுப்பினோம். ஆனால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். மேலும் நாங்கள் எங்களது பேட்டிங்கில் கவனம் செலுத்தி சிறந்த கூட்டணியை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். எங்கள் வீட்டிற்கு வெளியே நடைபெறும் போட்டிகள் குறித்து நாங்கள் இன்னும் எதையும் யோசிக்கவில்லை. இப்போதைக்கு எங்கள் ஒரே எண்ணம் அனைவரும் ஒருங்கிணைத்து அடுத்த போட்டியில் எப்படி செயல்படுவது என்பது குறித்து தான்” என்று பேசி இருக்கிறார்.






