17.5 ஓவரில் 161 ரன்.. விராட் கோலியின் ரெக்கார்டை உடைத்து.. முதல் வீரராக கேஎல் ராகுல் சாதனை 8 விக்கெட்டில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

0
86

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 40வது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

லக்னோ டெல்லி மோதல்

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசை இழந்த லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. தொடக்கம் அந்த அணிக்கு வழக்கம் போல சிறப்பாக அமைய முதல் விக்கெட்டுக்கு மார்க்ரம் மற்றும் மிச்சல் மார்ஸ் கூட்டணி 9.6 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தது. தொடக்கம் சிறப்பாக இருந்த நிலையில் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர்.

நிக்கோலஸ் பூரன் 9 ரன், அப்துல் சமாத் 2 ரன், டேவிட் மில்லர் 14 ரன், இறுதிக்கட்டத்தில் ஆயுஸ் பதோணி 21 பந்துகளில் 36 ரன் குவித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் 36 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி வெளியேற, லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

கேஎல் ராகுல் அபார சாதனை

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கருண் நாயர் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் களமிறங்க கருண் நாயர் 9 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் களம் இறங்கி சிறப்பாக விளையாட மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் 36 பந்துகளை எதிர் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:7 வருட ஐபிஎல் தொடரில்.. ரிஷப் பண்ட் இந்த மாதிரி செஞ்சு யாருமே பாக்கல.. ரொம்ப மோசமா இருக்காரு.. ஐபிஎல் 2025

அதற்குப் பிறகு அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் உடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் பொறுப்பாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடினார். அக்சார் பட்டேல் ஒரு முனையில் 20 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 34 ரன்கள் குவிக்க, மறுமுனையில் கேஎல் ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 57 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலமாக கேஎல் ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 130 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள கேஎல் ராகுல் 5000 ரன்கள் கடந்திருக்கும் நிலையில், டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி 157 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி அணி 16.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -