18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி விளையாடின
இதில் சிறப்பாக விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக மிச்சல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்க்ரம் ஒரு முனையில் நிதானம் காட்ட மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மார்ஸ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 60 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய பூரான் 12 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில் ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்து திரும்பவும் ஏமாற்றம் அளித்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய பதோனி 19 பந்துகளில் 30 ரன் மற்றும் டேவிட் மில்லர் 14 பந்துகளில் 27 ரன்கள் குவிக்க லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் மார்க்ரம் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக தொடக்க இடத்தில் களம் இறங்கிய வில் ஜாக்ஸ் 5 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 10 ரன்னில் வெளியேறினார். இருப்பினும் அதற்குப் பின்னர் களமிறங்கிய நமன் திர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நமன் திர் 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய திலகவர்மா சூரியகுமார் யாதவோடு பாட்னர்ஷிப் அமைத்தார்.
இதையும் படிங்க:கிரிக்கெட் வாழ்க்கையே மாற அவர்தான் காரணம்.. ஐபிஎல் இல்லன்னா எனக்கு இந்த வெளிச்சம் இல்லை – பட்லர் பெருமிதம்
இந்த நிலையில் 43 பந்துகளில் 67 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ் எதிர்பாராத விதமாக ஆவேஷ்கான் பந்துவீச்சில் வெளியேறினார். 182 ரன்களில் 5 விக்கெட் இழப்புக்கு பாண்டியா விளையாடிக் கொண்டிருந்தபோது 19ஆவது ஓவரை வீசிய சர்துல் தாகூர் அந்த ஓவரில் வெறும் 7 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதற்குள் வேறு காரணத்தால் திலக் வர்மா மைதானத்தை விட்டு வெளியேற சான்ட்னர் உள்ளே வந்தார். பின்னர் போட்டியின் கடைசி ஓவரை ஆவேஸ் கான் வீச, முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்தாலும் அதற்குப் பிறகு தனது சிறந்த பந்துவீச்சால் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இறுதியில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.