குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கடந்த பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு குஜராத் அணியின் ஜாஸ் பட்லர் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் தனது பேட்டிங் வரிசை குறித்து ஜாஸ் பட்லர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
குஜராத் அணியில் பட்லர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரராக திகழ்ந்தவர் ஜாஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணிக்காக கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வீழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து பல போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.
தற்போது குஜராத் அணியில் மூன்றாவது வரிசை ஆட்டக்காரராக விளையாடும் நிலையில், கடந்த போட்டியில் 73 ரன்கள் குவித்து பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆக ஆரம்பித்ததாகவும், தன்னை தொடக்க வீரராக மாற்றிய பெருமை மும்பை அணியின் பயிற்சியாளர் மகேந்திரா ஜெயவர்த்தனாவை சாரும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அவருக்குதான் நன்றி சொல்லணும்
இதுகுறித்து பட்லர் விரிவாக கூறும்போது “நான் பேட்டிங் வரிசையில் மேலும் கீழும் விளையாடுவதை ரசித்திருக்கிறேன். என் வாழ்க்கையின் முதல் பாதியில் நான் ஒரு மிடில் ஆர்டர் பிளேயர் அல்லது பினிஷர். உண்மையில் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக வாய்ப்பு அளித்ததற்காக மகேலா ஜெயவர்த்தனேவுக்கு நான் மிகப்பெரிய கடன் பட்டிருக்கிறேன். பவர் பிளேவை எப்படி விளையாட வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அதைக் கடந்து வந்தவுடன் முன்பு போல் பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன்.
இதையும் படிங்க:என்ன சாதித்தாலும்.. அந்தப் பெருமை தோனிக்குதான்.. என்னோட இந்த விஷயத்தையே அவர்தான் மாற்றினார் – அக்சார் பட்டேல்
இரண்டு பாணிகளையும் இணைத்து விளையாட முயற்சிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. பவர் பிளேவில் தேர்ச்சி பெற்று பின்னர் சுதந்திரமாக விளையாட முடிந்தால் நீங்கள் விளையாட்டில் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது. தற்போது இந்த வருடம் குஜராத் அணிக்காக மூன்றாவது வரிசையில் விளையாடி வருகிறேன். நான் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்காக மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்தேன். எனவே எனது அனுபவத்தை பயன்படுத்தி அணியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேட்டிங் செய்வேன்” என்று பட்லர் கூறி இருக்கிறார்.






