ஒருவேளை ரஷீத் கனை வாங்க முடியவில்லை என்றால் நாங்கள் இந்த 2 வீரர்களை வாங்கிக் கொள்வோம் – லக்னோ அணி

0
1279
Rashid Khan New IPL team

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிக பிரம்மாண்டமாக இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இந்திய மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் தற்பொழுதே ஆவலுடன் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக பழைய 8 அணிகள் தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை தக்க வைத்துக் கொண்டனர். தற்பொழுது புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக மூன்று வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பிசிசிஐ கூறிய நிபந்தனைப்படி இந்த 2 புதிய அணிகள் எந்த 3 வீரர்களை தக்க வைக்கப் போகிறது என்பது குறித்த அப்டேட்டை எதிர் நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த இருந்த நிலையில், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா இஷான் கிஷன் மற்றும் ரஷித் கான் ஆகியோரை வாங்க தயாராக இருக்கிறது என்ற செய்தி இன்று வெளியானது.

அகமதாபாத் இறுதி முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் லக்னோ அணி

இன்றைய தேதியில் டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் யார் என்றால் அது ரஷித் கான் தான் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இவரை வாங்குவதற்கு அகமதாபாத் மற்றும் லக்னோ இரண்டு அணிகளும் போட்டி போடுவதாக தகவல் கசிந்துள்ளது.

லக்னோ அணிக்கு முன்பாக அகமதாபாத் அணி ரஷித் கானை வாங்கி விட்டால் நிச்சயமாக, லக்னோ அணி அவரை வாங்குவது குறித்து எந்தவித யோசனையும் செய்ய முடியாது. ஒருவேளை இறுதி நேரத்தில் அகமதாபாத் அணி ரஷித் கானை வாங்காமல் போனால், அவரை தனது அணியில் இழுத்துப் போட லக்னோ அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ரஷித் கான் இல்லை என்றால் ரபாடா மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பக்கம் திரும்ப உள்ள லக்னோ அணி

ஒருவேளை இறுதி நேரத்தில் அகமதாபாத் அணி ரஷித் கானை வாங்கி விட்டால்,அவருக்கு பதிலாக இரண்டு வீரர்களை லக்னோ அணி குறி வைத்துள்ளது. அந்த இரண்டு வீரர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா என்கிற கூடுதல் தகவல் தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.

எந்த நோக்கத்தின் பார்த்தாலும் லக்னோ அணி குறி வைத்துள்ள வீரர்கள் டி20 போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பது நன்கு தெரிகிறது. எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.