ஆர்சிபி-யை சிக்க வைத்த லக்னோ கோயங்கா.. மாறாத சோக வரலாறு.. ரசிகர்கள் உச்சகட்ட கோபம்!

0
714
RCB

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வேடிக்கையான முடிவுகளை எடுத்து பரிதாபமாக வெளியேறக்கூடிய அணிகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்த இரு அணிகளும் களத்தில் மட்டும் இல்லாமல், ஏலத்திலும் வினோதமாக எதையாவது செய்து ரசிகர்களின் கேலிக்கு உள்ளாவதை வழக்கமாகவே வைத்திருக்கின்றன.

- Advertisement -

இந்த முறை நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்திலும் இது மாறவில்லை. இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் ஓரளவுக்கு நன்றாக ஏலத்தில் சென்றது. இந்தக் குறையை தீர்த்து வைக்கும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு அபத்தமான காரியத்தை செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக தமது அணியில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசில்வுட் மற்றும் ஹர்சல் படேல் இருவரையும் வெளியே விட்டிருந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டார்.

இப்படியான நிலையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்சி ஏலத்திற்கு வந்தார். அவரை மிக சுலபமாக மும்பை இந்தியன்ஸ் ஐந்து கோடிக்கு வாங்கியது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மும்பை இந்தியன்ஸ் அணியை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் ஏலத்திற்கு வந்தார். அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் ஏலத்திலிருந்து வெளியேற, லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. 6.80 கோடி இருக்கும் பொழுதுதான் அல்ஜாரி ஜோசப்புக்கு பெங்களூரு உள்ளே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணியுடன் பெங்களூரு அணி தொடர்ந்து மோதி இறுதியாக 11.50 கோடிக்கு அவரை வாங்கியது. லக்ன உரிமையாளர் கோயங்கா இந்த ஏலத்தில் ஒதுங்கி ஆர்சிபி-யை மாட்ட விட்டார். கோட்சிக்கு செல்லாமல் இவரை வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதற்கு அடுத்து இலங்கை அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா ஏலத்திற்கு வந்தார். அவரையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் நான்கு கோடிக்கு வாங்கி அசத்தியிருக்கிறது. இந்த இடத்தில் இவரையும் வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முயற்சி செய்யவில்லை.

தற்பொழுது சமூக வலைதளங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஏல அணுகு முறையை, அந்த அணியின் ரசிகர்களும், மற்ற அணியின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்து கேலி செய்து தங்களது கோபம், ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்!