32/5.. பாபர் அசாம் 1 ரன்.. நஷிம் ஷா 51 ரன்.. பரிதாபமாக சுருண்ட பாகிஸ்தான்.. நியூசி அணி தொடரை வென்றது

0
490
Pakistan

இன்று நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்ட இரண்டாவது ஒருநாள் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

தற்போது பாகிஸ்தான அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று என தோற்றது. இதற்கடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்து விட்டது.

- Advertisement -

போராடிய நியூசி விக்கெட் கீப்பர்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரெஸ் மரியு 18, நிக் கெல்லி 31, ஹென்றி நிக்கோலஸ் 22, டேரில் மிட்சல் 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 17, முகமது அப்பாஸ் 44 ரன்கள் என வெளியேறினார்கள். இதனால் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி உண்டானது.

இதைத் தொடர்ந்து ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய நியூசிலாந்து விக்கெட் கீப்பர் மிட்சல் ஹே இறுதிவரை களத்தில் நின்று 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 99 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் வாசிம் ஜூனியர் மற்றும் சுபியான் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சொதப்பிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள்

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் 1, இமாம் உல் ஹக் 3, பாபர் அசாம் 1, கேப்டன் முகமது ரிஸ்வான் 5, சல்மான் அலி ஆகா 9, டயாப் தாஹிர் 13 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். பாகிஸ்தான அணி 32 ரன்னுக்கு 35 விக்கெட்டை இழந்தது. இதனால் பாகிஸ்தான அணியின் தோல்வி பதினோராவது ஓவரிலேயே உறுதியானது.

இதையும் படிங்க : ஐபிஎல்-க்கு பும்ரா எப்போது வருகிறார்?.. வெளிவந்த முக்கிய தகவல்கள்.. ரசிகர்கள் சோகம்

இதைத்தொடர்ந்து வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பாஹிம் அஷ்ரப் அதிரடியாக விளையாடி 73 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து இன்னொரு முனையில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அதிரடியாக 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இவர்களது அதிரடி பேட்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கௌரவமாக 208 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து பந்துவீச்சில் பென் சியர்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -