ஆர்சிபி ரசிகர்கள் அற்புதமானவர்கள்.. ஆனால் சிஎஸ்கே ரசிகர்களின் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது – ஷேன் வாட்சன் உருக்கம்

0
63

இளம் வீரர்களை உள்ளடக்கிய தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முன்பு ஒரு காலத்தில் அதிரடி ஜாம்பவான் வீரர்களை கொண்ட ஒரு நட்சத்திர அணியாக திகழ்ந்தது.

சிஎஸ்கேவில் விளையாடிய மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான ஷேன் வாட்சன், சிஎஸ்கே ரசிகர்களின் அன்பை கண்டு சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

தற்போதைய இளம் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எம்.எஸ். தோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. பல்வேறு ஜாம்பவான்களை உள்ளடக்கிய சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன் சென்னை அணியில் இணைந்த பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.

சுமார் இரண்டு வருடங்களாக ஆர்சிபி அணியில் விளையாடிய அவர், அதற்குப் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே ரசிகர்களின் முக்கிய வீரராக மாறினார். அதிலும் 2019 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையிலும் அணிக்காக விளையாடியது அவர் மீது பெரிய அன்பை ரசிகர்கள் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறும்போது “நான் இரண்டு வருடங்கள் ஆர்.சி.பி அணியில் விளையாடினேன். அது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் அற்புதமானவர்கள். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் இணைந்த முதல் ஆண்டிலும், அந்த ஆண்டில் நான் விளையாடிய சிறந்த ஆட்டத்திற்கு பிறகு சிஎஸ்கே ரசிகர்களிடமிருந்து எனக்கு கிடைத்த அந்த அபாரமான ஆதரவை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை.

நான் உலகின் எந்த மூளைக்கு சென்று விளையாடினாலும் அங்கே இருக்கும் 90 முதல் 95 சதவீத ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் போலவே எனக்கு தோன்றுகிறார்கள். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சீசனில் நான் செயல்படுத்திய மிகச் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக எனக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவு உண்மையில் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. என் கிரிக்கெட் பால்கின் பெரும் பகுதியை நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது போன்ற ஒரு உணர்வை கொடுக்கிறது. அதற்குக் காரணம் இத்தனை ஆண்டுக்குப் பிறகும் கூட அந்த ரசிகர்கள் எனக்கு கொடுக்கும் அன்பும் ஆதரவும் உண்மையில் என்னை பிரமிக்க வைக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -