என்னய்யா நடக்குது.. யாருயா இந்த பையன்.. LSG விதியை மாற்றிய இந்திய உள்நாட்டு வீரர்.. நொடிந்து போன ரகானே

0
41
LSG

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில இந்திய உள்நாட்டு இளம் வீரரின் ஆச்சரியமான அதிரடியில் லக்னோ அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. புள்ளி பட்டியலில் மேலேறி செல்வதற்கு இரண்டு அணிகளுக்குமே இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாக இருந்தது.

- Advertisement -

சுதாரித்த கொல்கத்தா

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா அணிக்கு ரகானே 24 பந்தில் 41, ரகுவன்சி 33 பந்தில் 45, கேமரூன் கிரீன் 24 பந்தில் 32, ரோமன் பவல் 24 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்சல் மார்ஸ் 11 பந்தில் 15, எய்டன் மார்க்ரம் 15 பந்தில் 22 ரன் எடுத்தார்கள். தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் 9 பந்தில் 10, நிக்கோலஸ் பூரன் 15 பந்தில் 13, அப்துல் சமாத் 4 பந்தில் இரண்டு ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேற்றினார்கள்.

- Advertisement -

இளம் வீரர் மேஜிக்

இதைத்தொடர்ந்து ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய ஆயுஸ் பதோனி 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் பதினாறு ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 128 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் இருந்தது. கடைசி நான்கு ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படிங்க : பும்ராவுக்கு அப்ப 16 வயசு.. நான் கேன்சரில் இருந்து திரும்ப வந்த சமயம்.. அப்பவே என்னை மிரட்டினார் – யுவராஜ் சிங் பேட்டி

இந்த நிலையில் தனி ஒரு வீரராக நின்ற இந்திய உள்நாட்டு இளம் வீரர் முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சித்தர்கள் உடன் 54 ரன்கள் குவித்து, லக்னோ அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். மினி ஏலத்தில் இவரை லக்னோ அணி 2.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -