கோலியின் விக்கெட்டை எடுக்க கனவு கண்டுக்கிட்டு இருந்தேன்.. என் பிளான் இதுதான் – தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் பேட்டி

0
20
Virat

நேற்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணியை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆர்சிபி அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றாவது போட்டியை தோற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 82 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் அந்த அணியின் 181 ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. மேக்ஸ்வெல் 3 விக்கெட் மற்றும் யாஸ் தயால் சிறப்பாக பந்துவீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லக்னோ அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழல் பந்துவீச்சாளர் மணிமாறன் சித்தார்த்தை வைத்து லக்னோ அணி பந்துவீச்சை ஆரம்பித்தது. மூன்று ஓவர்கள் பவர் பிளேவில் வீசிய அவர் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினார். இரண்டாவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் அவருக்கு முதல் விக்கெட்டாக விராட் கோலி விக்கெட் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து மணிமாறன் சித்தார்த் பேசும்பொழுது ” விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் கனவு கண்டேன். நீங்கள் யாரிடம் கேட்டாலும் இந்த விக்கெட் மிகப்பெரியது எடுக்க விரும்பும் விக்கெட் என்று சொல்வார்கள். நான்மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பந்துவீச்சில் என்னுடைய விஷயங்களை எளிமையாக வைத்துக் கொள்ள விரும்பினேன். நான் லென்த்தில் சரியாக இருந்தால் என்னால் வெற்றி பெற முடியும் என்று எனக்குத் தெரியும். நான் எனது பலத்தை நம்பி விளையாடினேன்.

இதையும் படிங்க : சிஎஸ்கேவில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் திடீரென பங்களாதேஷ் பயணம்.. காரணம் என்ன.. திரும்பி வருவாரா?

மேலும் மயங்க் யாதவை நான் வலைகளில் விளையாடுகிறேன். அவருடைய வேகம் மற்றும் தற்பொழுது அவருடைய வெற்றியை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். லக்னோ அணியில் இருக்கும் அனைத்து வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அனைவருக்கும் மயங்க் யாதவிடம் என்ன இருக்கிறது என்று நன்றாகத் தெரியும். அதை அவர் சரியான நேரத்தில் அதை அனுப்பி கொடுக்கிறார். இதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -