நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.
இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ 209 ரன்கள் எடுக்க இலக்கு 213 ரன்கள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி 203 ரன்கள் மட்டுமே எடுக்க லக்னோ 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரபரப்பான போட்டி
இந்த போட்டி 19 ஓவர்களாக நடத்தப்பட்டது. லக்னோ அணியில் ஐந்து பவுலர்கள் மட்டுமே இருந்தார்கள். இறுதி ஓவரை ஓவரை வீச ஸ்பின்னர்கள் திக்வேஷ் ரதி மற்றும் ஷபாஸ் அகமத் இருந்தார்கள். பேட்டிங் முனையில் ரொமாரியோ ஷெப்பர்ட் இருந்தார்.
இதன் காரணமாக போட்டி பரபரப்பாக மாறியது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் இறுதி ஓவரை திக்வேஷ் ரதி கையில் கொடுத்தார். அந்த ஓவரை அவர் சிறப்பாக வீச லக்னோ அணி பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை வென்றது.
நான் இவரை நம்பினேன்
இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “இது நிச்சயமாக எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக இருந்தது. எங்கள் இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டி. எங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமையவில்லை. நாங்கள் முடிந்தவரை சிறப்பாக செயல்பட பல காம்பினேஷன்களை உருவாக்கி வந்தோம். இந்த போட்டியில் மார்ஸ் மிகவும் அபாரமான முறையில் விளையாடி முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்”
இதையும் படிங்க : நாங்க இப்ப தோத்துட்டா என்ன?.. போட்டிக்கு நடுவுல எனக்கு இருந்த ஒரே குழப்பம் இது மட்டும்தான் – ரஜத் படிதார் பேச்சு
“கடைசி ஓவரை வீசும் போது ரொமாரியோ பேட்டிங் முனையில் இருந்தார். இந்த நேரத்தில் நாங்கள் திக்வேஷ் ரதியை விட்டு ஷாபாஸ் அகமதை நம்புவது கடினமான விஷயம். எனவே நான் இவரிடமே சென்றேன். அவர் எங்களுக்கு ஏற்கனவே சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். எனவே அவரை நம்பினேன் வெற்றி பெற்றுக் கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.






