40 ஓவர் மேட்டர்.. நாங்க பண்ற இது காப்பாத்தாது.. இங்கிலாந்து தொடரையும் யோசிக்க மாட்டேன் – ரிஷப் பண்ட் வருத்தம்

0
262
Rishabh

நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்த போதும் லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்தது. இது குறித்து வருத்தமாக ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டாலும் கூட, சீசனின் கடைசி போட்டியை வெற்றியுடன் முடித்துக் கொள்வதற்காக களம் இறங்கியது. அதே சமயத்தில் ஆர்சிபி வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.

- Advertisement -

மீண்டும் லக்னோவுக்கு ஏமாற்றம்

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் வந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்து 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக லக்னோ அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. வந்து வீச்சில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த ஜிவேஷ் சர்மா வெறும் 33 பந்துகளை மட்டுமே சந்தித்து 85 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்து லக்னோ அணியின் வெற்றிக்கனவை கலைத்துவிட்டார். மேலும் ஆர்.சி.பி அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. தான் சதம் அடித்தும் தனது அணி தோல்வி அடைந்தது கேப்டன் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

40 ஓவர்கள் பிரச்சனை

இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசும் பொழுது ” நீங்கள் ஒரு போட்டியை வெல்ல வேண்டும் என்றால் 40 ஓவர்களும் நன்றாக விளையாட வேண்டும். நாங்கள் முதல் 20 ஓவர்கள் நன்றாக ஆரம்பிக்கிறோம். அடுத்த 20 ஓவர்களில் தவறவிடுகிறோம். இதே கதையாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் மேம்படுத்த வேண்டிய விஷயங்களை பேசுகிறோம். ஆனால் தற்போது தொடரே முடிந்து விட்டது, அந்த பேச்சுக்கள் என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை”

இதையும் படிங்க : 33 பந்து 85 ரன்.. என் வழிகாட்டி தினேஷ் கார்த்திக் சொன்னத செஞ்சன்.. கப் உறுதி – ஜிதேஷ் சர்மா பேட்டி

“தற்போது இங்கிலாந்து தொடர் என்று எதுவும் இல்லாமல் கிரிக்கெட்டை ஆப் பண்ணி வைக்கப் போகிறேன். கிரிக்கெட்டை பற்றி எதுவும் யோசிக்காமல் இருக்க போகிறேன். இதற்குப் பிறகு இங்கிலாந்து தொடர் வர இருக்கிறது. அதற்கு நான் மனநிலையாக நல்ல முறையில் தயாராகி வருகிறேன். இப்போதைக்கு என்னுடைய இலக்கு இங்கிலாந்து தொடர்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -