“4 ஓவர பாக்கறது.. எங்க டீமுக்கு ஒரு புது திட்டம் உருவாகி இருக்கு.. அடுத்து இப்படித்தான்!” – பகார் ஜமான் அதிரடி பேட்டி!

0
419
Fahar

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக வாழ்வா சாவா? என்ற போட்டி அமைந்திருந்தது.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை சோதிக்கும் வகையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 401 ரன்கள் குவித்து தலைவலியை உருவாக்கியது.

- Advertisement -

போட்டியை வென்றால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் நீடிக்க முடியும் என்கிற கட்டாயத்தில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜாமான் அதிரடியில் மிரட்டினார்.

வெறும் 63 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் சதம் அடித்தார். மேற்கொண்டு களத்தில் நின்ற அவர் 81 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் உடன் 128 ரன்கள் குவித்தார். மழையின் காரணமாக விதிப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

எதிரணியோடு சேர்த்து மழையையும் மனதில் வைத்து இன்று பகார் ஜமான் விளையாடியது மிகவும் சிறப்பான ஒரு ஆட்டம். தனிப்பட்ட வகையில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பான ஒரு ஆட்டம்.

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசும் பொழுது “முதல் நான்கு ஓவர்களை பார்க்க வேண்டும்; இலக்கைத் துரத்த வேண்டும்; இதுதான் எங்களுடைய திட்டம். இன்று என்னுடைய நாளாக இருந்தது. உண்மையை சொல்வது என்றால் இன்று எங்களுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. ஆனால் இந்த இன்னிங்ஸை நான் ரசித்தேன்.

எங்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா சாவா ஆட்டம் என்று தெரியும். இதனால் நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட முடிவு செய்து இருக்கிறோம்.
எல்லோரும் அப்படியே விளையாட முயற்சி செய்கிறார்கள். இது சிறந்த ஒன்றாகும்.

தனிப்பட்ட முறையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 193 ரன்கள் அடித்தது எனக்கு சிறந்த ஆட்டமாக இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணியும் தரமான அணி. எனவே இந்த ஆட்டமும் தனிப்பட்ட முறையில் எனக்கு சிறந்தது.

மழையின் காரணமாக டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த பொழுது, எப்படியும் விதி குறுக்கிடும் அதனால் மீண்டும் சென்று அதிரடியாக விளையாடுவது என்றுதான் முடிவு செய்தோம். எதுவும் தவறாக போய்விடக் கூடாது என்கின்ற பிரார்த்தனை எங்களிடம் எல்லோரிடமும் இருந்தது. மேலும் நாங்கள் ஆக்ரோஷமான மனநிலையுடன் விளையாட விரும்புகிறோம். அதையே அடுத்த ஆட்டத்திலும் தொடர்வோம்!” என்று கூறியிருக்கிறார்!