கொரோனா லக்டவுன் டபுள் மடங்கு உழைத்தேன், இப்போது அதற்கெல்லாம் அறுவடை செய்கிறேன் – ஆட்டநாயகன் சிராஜ் பேட்டி!

0
143

கொரோனா லாக்டவுனில் என்னுடைய உடல்தகுதி மற்றும் பந்துவீச்சு துல்லியம் இரண்டிற்கும் கடின உழைப்பை கொடுத்தேன் அதன் பலனாக இப்போது நன்றாக செயல்பட முடிகிறது என்று பேசியுள்ளார் ஆட்டநாயகன் முகமது சிராஜ்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரின் அபாரமான ஆட்டத்தால் நான்கு விக்கெடுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

- Advertisement -

175 ரன்கள் இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் இழந்து சரிவை சந்தித்துக் கொண்டிருந்தது. ஒரு முனையில் நன்றாக ஆடிவந்த பிரப்சிம்ரன் 46 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள் ஆட்டமிழக்க இருந்த ஒரு நம்பிக்கையும் இழந்து 18.2 ஓவர்களில் 150 ரன்கள் ஆல் அவுட் ஆனது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஒரு சிறப்பான ரன் அவுட் செய்த சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு பேட்டியளித்த முகமது சிராஜ் கூறுகையில்,

“இன்றைய போட்டியில் முதல் பந்தை வீசியவுடன் எந்த இடத்தில் பந்துவீசினால் சரியாக இருக்கும் என்று கணித்து விட்டேன். அதன் பிறகு பந்தை ஸ்விங் செய்து தொடர்ந்து தாக்குதல் நடத்தினேன்” என்றார்.

- Advertisement -

பின்னர் தனது உடல்தகுதி மற்றும் பந்துவீச்சில் துல்லியமாக செயல்படுவது குறித்து பேசிய சிராஜ், “கொரோனா லாக்டவுனில் நான் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கும் உடல்தகுதியை பெறுவதற்கும் பயன்படுத்திக் கொண்டேன். அதற்கு முன்புவரை என்னுடைய பந்தை நிறைய பவுண்டரிகள் அடித்து வந்தார்கள். ஆகையால் என்னுடைய திட்டங்கள் என்ன? உடல் தகுதி எப்படி இருக்க வேண்டும்? என்று திட்டம் வகுத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தினமும் பந்துவீச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என அனைத்தையும் செய்தேன். அதன் பலனை இப்போது பெறமுடிகிறது.

எப்போதும் என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கு மற்றும் வளர்த்துக் கொள்வதற்கு முனைப்பு காட்டுவேன். அணிக்கு என்னால் இந்த வகையில் மட்டுமே பங்களிப்பை கொடுக்க முடியும் என்பதால் அதில் முழு செயல்பாட்டை வெளிப்படுத்த முற்படுகிறேன்.

மேலும் நான் நன்றாக பீல்டிங் செய்யக் கூடியவன். துரதிஷ்டவசமாக ஆங்காங்கே அழுத்தம் காரணமாக சில தவறுகள் செய்வதால் என் மீது அப்படிப்பட்ட அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நான் எனது பந்துவீச்சை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ, ஃபீல்டிங்களும் அப்படிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறேன்.” என்றார்.