இந்தியாவில் நடைபெற்று வரும் மற்றொரு புகழ்பெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் தொடரான உத்தரப்பிரதேச டி20 கிரிக்கெட் லீக் தொடர் இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது.
முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்குபெறும் இந்தத் தொடரின் போட்டிகள் நடைபெறும் தேதி, முன்னணி வீரர்கள் பங்கேற்கும் அணிகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று இல்லை என்றாலும் இந்தியாவின் மற்றொரு பிரபலமான டி20 லீக் தொடரான உத்தரப்பிரதேச டி20யின் இரண்டாவது தொடர் இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. மொத்தமாக ஆறு அணிகள் பங்கு பெற உள்ள இந்தத் தொடரின் போட்டிகள் அனைத்தும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
கோரக்பூர் லயன்ஸ், நொய்டா சூப்பர் கிங்ஸ், லக்னோ ஃபால்கன்ஸ் மற்றும் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் உட்பட ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த லீக் தொடரில் முக்கிய நட்சத்திர வீரர்களும் விளையாடுகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் மீரத் மவேரிக்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். மேலும் நித்திஷ் ராணா மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், புவனேஸ்வர் குமார் மற்றும் பிரியம் கார்க் ஆகியோர் லக்னோ அணிக்காக விளையாட தயாராக இருக்கின்றனர்.
மேலும் துருவ் ஜூரேல் மற்றும் யஷ் தயால் ஆகியோர் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காகவும், சிவம் மாவி காசிருத்ராஸ் அணிக்காகவும், மோஷின் கான் மற்றும் சிஎஸ்கேவின் சமீர் ரிஸ்ஸி ஆகியோர் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். இந்தத் தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் காசி ருத்ராஸ் மற்றும் மீரட் மேவரிக்ஸ் ஆகிய அணிகள் விளையாடி இருக்கின்றன. இந்தப் போட்டித் தொடர் இன்று முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3.30 மற்றும் 07.30 மணி என்று இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 11ம் தேதி முதல் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டியும் செப்டம்பர் 12ஆம் தேதி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. ரோகித் சர்மா பஞ்சாப் அணிக்கு செல்கிறாரா.?.. சஞ்சய் பங்கர் வெளியிட்ட வியூகம்
செப்டம்பர் 14ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் ஜியோ சினிமா மற்றும் பான் கோட் ஆப்களில் இதன் போட்டிகளை கண்டு களிக்கலாம். ஐபிஎல் தொடர் போன்றே இந்தத் தொடரும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.