டி20 உட்பட.. நாளை ஒரே நாளில் 4 சர்வதேச போட்டிகள்.. தொடங்கும் நேரங்கள் மற்றும் எந்த சேனலில் பார்க்கலாம்.?

0
38

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே தொடரை நிர்ணயிக்கப் போகும் போட்டியாக இருப்பதால் இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்னும் மூன்று போட்டிகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில் போட்டி தொடங்கும் நேரம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடரை நிர்ணயிக்கப் போகும் போட்டியாக இது இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி நாளை காலை 9:30 மணியளவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதைத் தவிர இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் நாளை காலை 10 மணியளவில் காலியில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணி வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைத் தவிர ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியும் நாளை நடைபெற உள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளை இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இது கருதப்படுகிறது.

எனவே இந்த ஒரு நாள் தொடரில் வெற்றி பெற ஆஸ்திரேலியா அணில் கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் நான்காவதாக அபுதாபியில் அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. இதை முடித்துவிட்டு இரண்டு அணிகளும் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடும்.

இதையும் படிங்க:3-1 இந்த கிரவுண்ட்ல இருந்து நாங்க ஜெயிப்போம்.. இவங்க 2 பேர சைலன்ட் ஆக்கிட்டா போதும் – முன்னாள் ஆஸி வீரர் டேரன் லீமன்

அயர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா வங்கதேச தொடர் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஆப்பிலும், இலங்கை நியூசிலாந்து தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி எல்ஐவியிலும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் பேன் கோடு ஆப்பிலும், அயர்லாந்து தென்னாப்பிரிக்கா தொடர் பேன் கோட் ஆப்பில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

- Advertisement -