3-1 இந்த கிரவுண்ட்ல இருந்து நாங்க ஜெயிப்போம்.. இவங்க 2 பேர சைலன்ட் ஆக்கிட்டா போதும் – முன்னாள் ஆஸி வீரர் டேரன் லீமன்

0
333
Daren lehmann

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடர் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணி மற்ற அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரில் விளையாடி பயிற்சி பெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டேரன் லீமன் ஆஸ்திரேலியா அணிக்கு ஆதரவாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி கடைசியாக இந்திய அணிக்கு எதிரான தொடரை 2014 -15ம் ஆண்டு விளையாடி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதற்குப் பிறகு இதுவரை 10 ஆண்டுகளில் உள்நாடு, வெளிநாடு என நான்கு முறை ஆஸ்திரேலியா இந்திய அணியிடம் தொடர்களை இழந்திருக்கின்றன. எனவே அந்த மோசமான வரலாறை முடிவு கட்டும் விதமாக ஆஸ்திரேலியா அணி அதற்கு ஏற்றவாறு திட்டங்களை தீட்டி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளத்தில் பொதுவாக பவுன்சர் பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். எனவே இதனை முக்கியமாக வைத்தே ஆஸ்திரேலியா அணியினர் திட்டம் தீட்டி வருகின்றனர் என்ற தகவலும் தற்போது வெளி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா இரண்டு முறை உலக கோப்பை வென்றபோது ஒரு வீரராக விளையாடிய டேரன் லீமன் இந்த கோடை காலத்தில் ஆஸ்திரேலியா அணி பெர்த்திலிருந்து தனது வெற்றிக் கணக்கை ஆரம்பிக்கும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அடிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும். பவுன்ஸ் ஆடுகளத்துக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் இருந்து இந்தக் கோடை காலத்தில் தனது வெற்றியை துவங்கும். அதற்குப் பிறகு தனக்கு சாதகமான சொந்த சூழ்நிலையில் விளையாடும். ஆனால் அதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அமைதியாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அனைத்து வடிவத்திலும் ஒன்பது சதங்கள் அடித்து 3571 ரன்கள் இதுவரை குவித்து இருக்கிறார். விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பதினாறு சதங்கள் உட்பட 5203 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரை பொருத்தவரை விராட் கோலி இந்த அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47.49 சராசரியில் 2042 ரன்களைக் குவித்திருக்கிறார்.

இதையும் படிங்க:எனக்கு பிரச்சனை விராட் கோலி கிடையாது.. இந்த இந்திய வீரருக்குதான் பவுலிங் பண்ண முடியல – ஹேசில்வுட் பேட்டி

மறுமுனையில் ரோகித் சர்மா 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 ரன்களை குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி 12 டெஸ்ட் போட்டிகளில் 1352 ரன்களும் ரோஹித் சர்மா 7 போட்டியில் விளையாடி 408 ரன்களும் குவித்திருக்கிறார்கள்.

- Advertisement -