50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நேற்றிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த 13 வது உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 282 ரன்கள் எடுத்த நிலையில் 36 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி கடந்த வருட உலகக் கோப்பை பைனலுக்கு பழி தீர்த்திருக்கிறது நியூசிலாந்து.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகளுக்கு விளம்பர தூதுவராக இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக பங்கேற்று விளையாடிய சச்சின் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இறுதியாக பங்கேற்றார் . அந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
அதன் பிறகு நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் அரையணி போட்டியோடு வெளியேறியது . இந்த வருடம் உலக கோப்பை போட்டி இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் இந்திய அணி முக்கியமாக உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் உலகக் கோப்பை துவக்க விழாவின்போது பேசிய சச்சின் உலகக்கோப்பை அரை இறுதியில் விளையாட இருக்கும் நான்கு அணிகள் பற்றியும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பற்றியும் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பேசிய அவர் இந்திய அணி பேட்டிங் பௌலிங் மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் பலம் பெற்று விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளையும் சிறப்பாக வென்றிருக்கிறது. வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனால் இந்தியா நிச்சயமாக அரை இறுதிக்கு தகுதி பெரும் அணிகளில் ஒன்று என குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பாக பேசிய சச்சின் டெண்டுல்கர்” இந்திய அணியை போலவே ஆஸ்திரேலியா அணியும் வலுவாக இருக்கிறது. அந்த அணியில் சமநிலை நன்றாக இருப்பதோடு இளவீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களும் கலந்து இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு இந்திய ஆடுகளங்களை பற்றிய அனுபவம் கூடுதல் பலமாக இருக்கும்” எனவும் தெரிவித்தார். மூன்றாவதாக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறினார் . சமீப காலமாக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி நிச்சயமாக இந்த வருட உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்று தெரிவித்தார்.
Sachin Tendulkar picks his Top 4 in World Cup 2023. [ICC]
— Johns. (@CricCrazyJohns) October 5, 2023
1) India
2) Australia
3) England
4) New Zealand pic.twitter.com/QR0K4O9HRQ
மேலும் உலக கோப்பையின் அரை இறுதியில் இடம் பெறும் மற்றொரு அணியாக சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்து அணியை தேர்வு செய்தார். இதுகுறித்து பேசிய அவர் நியூசிலாந்து அணி கடந்த இரண்டு முறையும் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது . உலகக்கோப்பை தொடர்களில் அவர்களது ஆட்டம் எப்போதுமே சிறப்பாக இருக்கும். அதனால் நியூஸ்லாந்த அணி இந்த வருடமும் சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்று கூறியிருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின். மேலும் இந்த நான்கு அணிகளில் ஒரு அணி தான் உலக கோப்பையை கைப்பற்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






