பங்களாதேஷ் டி20 சீரிஸ்.. வாய்ப்பு கிடைக்காத 7 திறமையான இந்திய வீரர்கள் – முழு பட்டியல் உள்ளே

0
308
Ruturaj

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு நேற்று 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. இதில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத 8 இந்திய வீரர்கள் பட்டியலை பார்க்கலாம்.

ருதுராஜ் : இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லை கேப்டனாக எதிர்காலத்தில் கொண்டு வருவதற்காக ருது ராஜ் புறக்கணிக்கப்பட்டார். இப்படியான நிலையில் கில் மற்றும் ஜெயஸ்வால் இருவருமே விளையாடாத பொழுதும் மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தை அபிஷேக் ஷர்மாவுக்கு கொடுத்து ருதுராஜை புறக்கணித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இஷான் கிஷான்: ரிஷப் பண்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் பங்களாதேஷ் தொடருக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டாவது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா இருக்கிறார். ஆனால் இடதுகை பேட்டராக மேல் வரிசையில் விளையாடும் கிஷான் கிஷான் சரியானவராக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

திலக் வர்மா : இந்திய டி20 அணிக்கு பகுதி நேர ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர் தேவைப்பட்டது. இந்த இடத்தை ரியான் பராக்கிடம் திலக் வர்மா தற்காலிகமாக தற்பொழுது இழந்திருக்கிறார். ரியான் பராக் தனது வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

- Advertisement -

ஆவேஷ் கான் : இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும், டி20 உலகக்கோப்பையில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டும், பிறகு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் வந்தவருக்கு திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

கலீல் அகமத் : மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு ஸ்விங் செய்யக்கூடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் கலீல் அகமது சில வாய்ப்புகளை மிகச் சமீபத்தில் பெற்றார். ஆனால் யாஷ் தயாலிடம் இழந்துவிட்டார்.

ரஜத் பட்டிதார் : மிடில் வரிசையில் துவக்க ஆட்டக்காரர் போல நிறுத்தாமல் தொடர்ந்து பௌண்டரிகளை அடிக்கக்கூடிய அதிரடி வீரராக இருக்கும் ரஜத் பட்டிதார் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாததால் இந்திய டி20 அணியிலும் வாய்ப்பை இழந்துவிட்டார்.

சாய் சுதர்ஷன் : இந்திய டி20 பேட்டிங் யூனிட்டில் முக்கியமான மூன்று வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட பொழுதும், இந்திய தேர்வுக்குழு சாய் சுதர்சனை திறமை இருந்த போதிலும் டி20 வீரராக அங்கீகரிக்கவில்லை என்று தெரிகிறது.

இதையும் படிங்க : 1886 நாட்கள் தொடரும் நியூஸி சோகம்.. 15 ஆண்டுக்கு பின் சாதித்த இலங்கை அணி.. வரலாற்று இன்னிங்ஸ் வெற்றி

நடராஜன் : இந்த வரிசையில் இன்னொரு தமிழக வீரரான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வீரர்களில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இந்த முறை ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டால் வாய்ப்புகள் தரப்படலாம் என்று கருதப்படுகிறது.

- Advertisement -