பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை முடித்திருக்கிறது. எப்படி மெட்ராஸ் திரைப்படத்தில் ஓவியம் வரையப்பட்ட சுவர் பல பேரை காவு வாங்கி இருப்பதாக அந்த படத்தில் காட்டப்படுமோ, அதேபோல்தான் இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது.
இந்த சூழலில் இதுவரை எத்தனை இந்திய வீரர்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்தவர் கிரிக்கெட் ஜாம்பவான் கும்ப்ளே.
2008 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள்:
இதை அடுத்து அந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் கங்குலி. கங்குலியும் பார்டர் கவாஸ்கர் தொடரில் 2008 ஆம் ஆண்டு சதம் அடித்த பிறகு அந்த தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ராகுல் டிராவிட். 2012 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா படுதோல்வியை தழுவியது அடுத்து இனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவை அவர் எடுத்தார். இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் லக்ஷ்மன். லக்ஷ்மணன் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியதை அடுத்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு:
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சேவாக். ஆஸ்திரேலியா மண்ணில் தோல்வி அடைந்ததன் காரணமாக சேவாக், டெஸ்ட் ஓய்வை அறிவித்தார். இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் தோனி 2014 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தொடரி விட்டுப் பாதியிலே அவர் விலக முடிவெடுத்தார். இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்திருப்பவர் அஸ்வின். 10 ஆண்டுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரில் மீண்டும் இந்திய வீரர் ஓய்வு பெற்றார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அஸ்வின் பாதியிலே ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு நாடு திரும்பினார்.
இதையும் படிங்க: அழுக்கான முறையில் வீரர்களிடம் பேசுவோம்.. ஆனா அழுக்கான பேச்சுனா என்னனு தெரியுமா? – ரோகித் சர்மா விளக்கம்
இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்தவர் ரோகித் சர்மா. பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோதே ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருப்பவர் விராட் கோலி. ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி ஒரு சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இரண்டு மாதத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகுவதாக முடிவு எடுத்துள்ளார்.






