இன்று ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டது. திறமை இருந்தும் இந்திய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசியக் கோப்பை இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையாக மாறி வருகிறது. மேலும் அவரை துணை கேப்டன் ஆகவும் அறிவித்திருப்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது.
ஜெய்ஸ்வால் : தேர்வு செய்யப்பட்ட கில்லை விட ஜெய்ஸ்வால் அதிரடியான வீரர். அத்துடன் கில்லை விட அதிக ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஆவரேஜ் வைத்திருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் : ஜெய்ஸ்வால் போலவே கில்லை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த செயல்பாட்டை வைத்திருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை கேப்டனாக இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றார். அப்போது இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு தராதது தான் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர் : தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த அணியில் ஒரு ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தேவை இருக்கிறது. ஆனாலும் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யவில்லை.
ரியான் பராக் : தற்போதைய அணியில் இடம்பெற்று இருக்கும் ரிங்கும் சிங் இடத்திற்கு ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இவரால் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட முடியும். மேலும் இவர் ஆப் ஸ்பின் பௌலராகவும் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ்க்கு அகர்கர் செஞ்சது அநியாயம்.. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல போறது யார்? – அஸ்வின் விமர்சனம்
பிரசித் கிருஷ்ணா : ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 8.67 எக்கானமியில் 25 விக்கெட் பிரசித் கிருஷ்ணா கைப்பற்றி இருந்தார். ஆனால் அவருக்கு 10 ரன்னுக்கு மேல் கொடுத்து 15 விக்கெட் மட்டுமே எடுத்த ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இதுவும் பிரச்சினையாகி வருகிறது.