“நான் சொன்னது போலத்தான்.. ஆஸ்திரேலியா அணிக்கு..!” – கம்பீர் அதிரடி ட்வீட்!

0
1677
Gambhir

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு அபாரமான முறையில் இருந்தது.

இறுதிப் போட்டிக்கு வந்த இந்திய அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. தொடரில் பங்குபெற்ற எல்லா அணிகளையும் இந்திய அணி வீழ்த்தியது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் மூன்று துறைகளும் திறமையை வெளிப்படுத்திய விதம் அசாத்தியமாக இருந்தது. எதிரணிகளை நிமிர விடாமல் இந்திய அணி முடக்கி வெற்றி பெற்று வந்தது.

எனவே இந்த முறை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று மிகவும் நம்பிக்கையோடு இந்திய ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் இந்திய அணியில் டாஸ் தோற்று ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சின் முன்னாள் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி நின்றதை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கை வகித்தது. இந்த ஆடுகளம் இரண்டாவது பேட்டிங் செய்வதற்கு மிகவும் வசதியான ஒன்று. அதே சமயத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்ததால் முதலில் பேட்டிங் செய்யவும் கடினமாக இருந்தது.

இதெல்லாம் சேர்ந்து நேற்று இந்திய அணிக்கு அதிர்ச்சியான ஒரு தோல்வியை கொடுத்ததோடு, உலகக் கோப்பையை கைப்பற்றும் கனவையும் கலைத்துப் போட்டு இருக்கிறது. ஆனால் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் செயல்பட்ட விதத்தை யாராலும் குறையாக சொல்லவே முடியாது.

இது குறித்து ட்விட் செய்துள்ள கௌதம் கம்பீர் கூறும் பொழுது ” நான் ஏற்கனவே சொன்னது போல நாங்கள் ஒரு சாம்பியன் அணி. எனவே இந்திய வீரர்கள் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். மேலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள்!” என்று கூறியிருக்கிறார்!

இந்திய அணி செயல்பட்ட விதத்திற்கு இந்த உலகக் கோப்பையை வென்று இருந்தால், மேலும் பல இளைஞர்கள் கிரிக்கெட்டுக்குள் வருவதற்கும் புதிய திறமைகள் இந்தியாவில் இருந்து எழுவதற்கும் பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!