6,0,6,6,6,4.. லிவிங்ஸ்டன் 20 வருட அதிரடி சாதனை.. ஸ்டார்க் மோசமான சாதனை.. இங்கிலாந்து ஆஸ்திரேலியா ODI

0
791
Mitchell starc and liam Livingstone

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த இரு அணிகளுக்கு இடையே நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிச்சல் ஸ்டார்க்கின் ஓவரை இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் துவைத்து எடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் டி20 தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையே வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. அடுத்ததாக தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன் நான்காவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மழை காரணமாக ஆட்டம் 50 ஓவர்களில் இருந்து 39 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் டக்கட் மற்றும் சால்ட் ஜோடி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 48 ரன்கள் குவித்தனர்.சால்ட் 22 ரன்களில் வெளியேற அடுத்ததாக களமிறங்கிய வில் ஜாக்ஸ் 10 ரன்னில் நடையை கட்டினார்.

- Advertisement -

அடுத்ததாக டக்கட் 63 ரன்களும் கேப்டன் ஹாரி புரூக் 58 பந்துகளில் 87 ரன்கள் என தனது பங்குக்கு விளையாடி செல்ல ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலமாக இங்கிலாந்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயரச் செய்தார். 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் என 229 ஸ்ட்ரைக் ரேட்டில் 62 ரன்கள் குவித்தார்.

இதில் குறிப்பாக ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய மிச்சல் ஸ்டார்க்கின் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 28 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக 28 ரன்கள் கொடுத்ததால் ஒரே ஓவரில் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த ஆஸ்திரேலியா பவுலர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்தார்.

இதையும் படிங்க:இங்கிலாந்து ODI.. நட்சத்திர ஆஸ்திரேலியா வீரர் காயத்தால் விலகல்.. இந்திய தொடரில் பங்கேற்பதும் சந்தேகம்

மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இங்கிலாந்து வீரர் ஃப்ளின்டாப்பின் சாதனையை லிவிங்ஸ்டன் சமன் செய்திருக்கிறார். 2004ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் பிளின்டாப் ஏழு சிக்ஸர்கள் அடித்தார். தற்போது இந்த போட்டியில் லிவிங்ஸ்டன் ஏழு சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணி 12 சிக்சர்கள் அடித்ததன் மூலமாக இந்த மைதானத்தில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ள அணி என்ற பெருமையும், இதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது.

- Advertisement -