எனக்கு 31 வயசு ஆகுது.. இங்கிலாந்து அதை பண்ணாலும் நான் அழபோறது கிடையாது – லிவிங்ஸ்டன் பேட்டி

0
132

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வீரரான லியாம் லிவிங்ஸ்டன் டி20 தொடரில் முக்கிய வீரராக இங்கிலாந்து அணிக்கு வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு நாள் தொடரில் இவரது பங்களிப்பு இங்கிலாந்து அணிக்கு போதுமானதாக இருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் அணிக்காக தான் தேர்வு செய்யப்படாவிட்டாலும் அது குறித்து வருத்தப்பட போவதில்லை என்று சில முக்கிய கருத்துக்களை லியாம் லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக டி20 தொடரில் லிவிங்ஸ்டன் விளையாடினாலும் அவரது அறிமுகம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட ஆரம்பித்த போது தான் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பிரபலம் ஆனார். மிடில் வரிசையில் களமிறங்கி இவர் அடிக்கும் சிக்ஸர்கள் மைதானத்தை தாண்டி வெளியே செல்லும் அளவுக்கு பவர் ஹிட்டிங் திறமையை கொண்டிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து டி20 அணியில் சிறந்து விளங்கினாலும் ஒரு நாள் தொடரில் இவரது செயல்பாடு போதுமானதாக அணிக்கு அமையவில்லை. 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒரு நாள் உலக கோப்பையில் வெளியேறி உள்ளதை தொடர்ந்து புதிய அணியை மாற்றி அமைக்க முயற்சி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அணிக்கு நீக்கப்படும் வீரர்களின் பட்டியலில் லிவிங்ஸ்டன் பெயரும் இருப்பதால் தான் அது குறித்து வருத்தப்பட போவதில்லை எனவும் விளையாடுவதற்கு நிறைய தொடர்கள் இருக்கின்றன எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து லிவிங்ஸ்டன் விரிவாக கூறும்போது “உண்மையில் எனக்குத் தெரியவில்லை. நான் இதனை சவால்களில் ஒன்றாக பார்க்கிறேன். டி20 தொடரில் எனக்கு டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய கிடைப்பது மகிழ்ச்சியாக உணர்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாக அல்லது மாதமாக நான் போட்டிகளில் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறேனோ அந்த அளவுக்கு ஆட்டங்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நான் காண்பித்தது போல உணர்கிறேன்.

50 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் உலகக் கோப்பையை அகற்றி விட்டுப் பார்த்தால் நான் இதையே செய்திருப்பது போல உணர்கிறேன். ஆனால் உண்மையில் என்னவென்றால் எனக்கு தற்பொழுது 31 வயதாகிறது. எனவே நான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்காக இங்கு உட்கார்ந்து அழ போவதில்லை. உலகம் முழுவதும் விளையாடுவதற்கு நிறைய கிரிக்கெட் தொடர்கள் இருக்கிறது.

இதையும் படிங்க:நீங்க வளர்ந்தது மும்பைலதான்.. அதனால இந்த ஒரு விஷயம் பண்ணுங்க.. ரோகித்துக்கு கோரிக்கை வைக்கும் ஓஜா

நான் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடவில்லை என்றால் எனக்கு இன்னமும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார். இதன் மூலமாக லிவிங்ஸ்டன் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடவில்லை என்றாலும் உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்களில் விளையாட போவதாக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்

- Advertisement -