நீங்க வளர்ந்தது மும்பைலதான்.. அதனால இந்த ஒரு விஷயம் பண்ணுங்க.. ரோகித்துக்கு கோரிக்கை வைக்கும் ஓஜா

0
53

ரோஹித் சர்மா தனது கேப்டன் பதவியை விட்டு விலகி தற்போது ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில் அடுத்த வருடம் மும்பை அணியை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அவரது சக நண்பரும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான பிரக்யான் ஓஜா ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா முதன்முதலாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த பிறகு தான் அவரது முழு திறமையும் வெளிப்பட்டது. ரிக்கி பாண்டிங்க்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து மும்பை அணி பெரிய ஏற்றத்தை கண்டது. அவரது தலைமையில் இதுவரை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று நட்சத்திர முன்னணி அணியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சரியில்லாத நிலையில் அவருக்கு பதிலாக மும்பை நிர்வாகம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது இந்த ஆண்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே அடுத்த ஆண்டு ரோஹித் சர்மா மும்பை அணியை விட்டு விலகப் போகிறார் என்றும் வேறு அணிக்காக விளையாட இருக்கிறார் என்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஆன ஓஜா இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஓஜா இது குறித்து கூறும் போது “ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகுவது எளிதான காரியமாக இருக்காது. என்னை பொருத்தவரை ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கூறுவேன். ஏனென்றால் இந்த அணிக்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார். மேலும் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் வளர்ந்ததும் இங்குதான். அவர் இன்று இருக்கும் அந்தஸ்துக்கு மும்பை இந்தியன்ஸ் உடன் எங்கோ பிணைக்கப்பட்டு இருக்கிறது.

அதனால் அவர் அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவது நல்லது என்று நான் கூறுவேன். ஆனால் அவர் ஒரு வேலை அணியை விட்டு விலகினாலும் இது பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் தொடர் என்பதால் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரணமானது தான்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:எங்க நாட்டுக்கு வந்து.. எங்க ரசிகர்களை தப்பா பேசுவிங்களா.. இனி இதான் பதில் – கவாஸ்கர் விமர்சனம்

எனவே ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது வேறு அணிக்கும் இடம் மாறுவாரா? என்பதை இந்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலம் வரைக்கும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் டி20 உலக கோப்பை தொடரை வென்றிருப்பதால் ஒரு மகத்தான இந்திய அணியின் கேப்டனை மும்பை அவ்வளவு எளிதில் விடாது என்று அனைவரும் கருதுகின்றனர்.

- Advertisement -