உலக கோப்பையை ஜெயிக்கிறது இருக்கட்டும் முதல்ல அரை இறுதிக்கு வாங்க – கபில்தேவ் மீண்டும் மீண்டும் தாக்கு!

0
364
Rohitsharma

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் குறித்து சமீப காலங்களில் இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் கடுமையாகவே விமர்சித்து வருகிறார். சில நேரங்களில் அவரது விமர்சனம் கொஞ்சம் எல்லை மீறுவதாகவும் இருக்கிறது. இவரது விமர்சனங்கள் குறித்து இந்திய அணி நிர்வாகமே பதில் சொல்லும் அளவுக்கு சூழ்நிலை மாறியது. ஜடேஜா ஒரு முறை பதில் சொல்லி இருந்தார்.

இவர் கடைசியாக, வீரர்கள் விளையாடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் விளம்பரங்களில் நடிக்க வேண்டியதாகவும் இருக்கிறது, இதனால் நிறைய பணம் வருகிறது, பணம் வந்தால் கூடவே ஆணவமும் சேர்ந்து வருகிறது, அதனால் யாரிடமும் எந்த அறிவுரையையும் இவர்கள் கேட்பதில்லை, தங்களை தாங்களே பெரிய வீரர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று மிகக் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்து பேசி இருந்த ரவீந்திர ஜடேஜா வெளியில் நடக்கக்கூடிய விஷயங்கள் எதுவும் எங்களுக்கு தெரிவதில்லை, நாங்கள் அப்படியான ஆட்கள் கிடையாது, நாங்கள் எல்லோரையும் மரியாதையாகவே பார்க்கிறோம், எங்கள் அணிக்குள் சில விஷயங்கள் நடக்கின்றன அது எதிர்காலத்தை பற்றியது என்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை முன்வைத்து கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு அறிவுரையும், இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? என்பதற்கான தன் கருத்தையும் கபில்தேவ் முன்வைத்து பேசியிருக்கிறார். இந்த முறை அவர் கருத்தில் கொஞ்சம் கடுமை குறைவாக இருந்தாலும், இந்திய அணி மீதான நம்பிக்கை அவருக்கு வழக்கம் போல் குறைவாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து கபில்தேவ் கூறும் பொழுது
“இங்கிலாந்தின் பாஸ்பால் அற்புதமானது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா விளையாடிய தொடர் நான் சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த தொடர். கிரிக்கெட் என்றால் அப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோகித் நல்ல பேட்ஸ்மேன். ஆனால் அவர் இன்னும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். இங்கிலாந்து போன்ற அணிகள் இப்படி எப்படி விளையாடுகின்றன என்று சிந்திக்க வேண்டும்.

இந்த முறையில் இந்தியா மட்டுமல்ல மற்ற எல்லோருமே விளையாட வேண்டும். ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து அணிகளும் முன்னுரிமை கொடுத்து விளையாட வேண்டும். டிராவை நோக்கி பயணிக்க கூடாது.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா முதலில் நான்கு இடங்களுக்குள் வர வேண்டும். அதன் பிறகு எதுவும் சாத்தியமாகலாம். அரை இறுதியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை. உங்கள் வழியில் விஷயங்கள் செல்ல வேண்டும். ஆனால் மிக முக்கியமான விஷயம் முதலில் அரை இறுதிக்கு செல்வதற்கு நான்கு இடங்களில் வரவேண்டும்.

எந்த ஒரு வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் காயம் என்பது ஒரு பகுதியாகும். ஆனால் இந்திய அணியினர் அதிகப்படியான கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அணிக்கும் அதன் வீரர்களுக்கும் எவ்வளவு கிரிக்கெட் கொடுக்க நினைக்கிறார்கள் என்பதை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -