“பதிரனாவை வைத்து இந்தியாவை சாய்ப்போம்.. அதுக்கான மெச்சூரிட்டி அவருக்கு வந்து இருக்கு!” – இலங்கை கோச் சவால் பேச்சு!

0
773
Pathirana

தற்பொழுது நடந்து வரும் ஆசியக் கோப்பைத் தொடர் மிகவும் பரபரப்பான, எதிர்பாராத திருப்பங்களுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட வெற்றி தோல்வி கிடையாது. மழைதான் முக்கிய காரணமாக இருக்கிறது!

பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை இரண்டாவது சுற்றில் பெற்றது.

- Advertisement -

இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்று முதல் போட்டியை வென்று, இலங்கை அணி இரண்டாவது சுற்றில் இருந்து புள்ளியை பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது சுற்றுப்போட்டி இழுபறி நிலையில் மழையால் இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டிய அவசியத்தை மழை உருவாக்கி இருக்கின்றது.

நாளை இந்திய அணி இலங்கை உடன் மோத இருக்கிறது. ஒருவேளை இன்று போட்டி டிராவாகி நாளைய போட்டியும் மழையால் கைவிடப்பட்டால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் பெரிய சிக்கல்கள் உண்டாக ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவை நாளை எதிர் கொள்ள இருக்கும் இலங்கை அணியின் துணை பயிற்சியாளர் நவீத் நவாஸ், இந்தியாவை வெல்வது குறித்தும், அடுத்த சுற்றுக்கும் முன்னேறுவது குறித்தும் பதிரனாவை வைத்து மிக முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“தோனியும் சென்னை அணி நிர்வாகமும்
பதிரனா வளர்ச்சியில் பங்கு பெற்று இருக்கலாம். ஆனால் அவர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தயாரிப்பு. அவர் எங்களுக்காக இரண்டு அண்டர் 19 உலகக் கோப்பை விளையாடியிருக்கிறார். அவரை சிறுவயதில் அடையாளம் கண்டவர்கள் நாங்கள். அவருடைய வளர்ச்சி திட்டங்களில் இருந்தது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்.

ஐபிஎல் ஆட்டங்கள் அவரது தனிப்பட்ட ஆட்டத்தை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கின்றன. 18, 19 வயதில் மகேந்திர சிங் தோனி மாதிரியான கேப்டன் தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறார். சிஎஸ்கே அணியின் பெரிய ஆட்டங்களின் போது அழுத்தத்தை எப்படி கையாள்வது? பெரிய போட்டிகளுக்குள் எப்படி இருப்பது? என்பது குறித்து தோனியிடமிருந்து அவர் நிறைய கற்று இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவரை நாங்கள் சிறுவயதிலேயே அடையாளம் கண்டு கொண்டோம். சிஎஸ்கே அவரை எதையோ பார்த்து எடுத்தது. ஆனால் அவருடைய வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!