“கோலி நின்னா 230 ரன் அடிப்போம்.. தப்பா கணக்கு போடாதிங்க மக்களே” – ரெய்னா பேச்சு!

0
161
Raina

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு, வழக்கம்போல் நாக் அவுட் சுற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் பெரிய காரணமாக அமைந்தார்கள். அவர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. அவர்கள் அதற்கான முயற்சி செய்த பொழுது விக்கெட்டை இழந்தார்கள். இது அடுத்து வரக்கூடிய எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் பெரிய அழுத்தத்தை உருவாக்கியது.

- Advertisement -

இது உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடத்தில் வந்த விராட் கோலியின் நான்காவது இடத்தில் வந்த சூரியகுமார் யாதவும்தான் பேட்டிங் யூனிட்டில் இந்திய அணியை பெரிய அளவில் உயர்த்தி பிடித்தார்கள். முக்கிய போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இது போதுமானதாக வெற்றிக்கு அமையவில்லை.

இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய டி20 அணியை மாற்றி அமைக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்து, ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி உருவாக்கப்பட்டது. இதில் நிறைய இளம் வீரர்கள் உள்ளே வந்தார்கள். இந்திய மூத்த வீரர்கள் கடந்த 14 மாதங்களாக இந்திய டி20 அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும் வெளியேற்றப்பட்டார்.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திடீரென திரும்பி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் டி20 உலகக் கோப்பை திட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக இதுவரையில் வாய்ப்பு பெற்று வந்த இரண்டு இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கிறார்கள். இதுகுறித்து இந்திய ரசிகர்களின் சிலர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

டி20 இந்தியா அணியில் விராட் கோலி வந்திருப்பது குறித்து பேசி உள்ள சுரேஷ் ரெய்னா “விராட் கோலி பேட்டிங்கில் எப்பொழுதும் தாக்குதல் மனப்பான்மை கொண்டவர். அவர் இன்னிங்ஸை மிகச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவார். மேலும் டி20 கிரிக்கெட் குறுகிய வடிவம் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் டி20 கிரிக்கெட் வடிவமும் பெரியதுதான். நீங்கள் 20 ஓவர் அங்கு நின்று முழுமையாக விளையாட வேண்டும்.

நாம் அடுத்து டி20 உலக கோப்பைக்காக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா சென்று விளையாட இருக்கிறோம். அங்கு ஆடுகளங்கள் மெதுவாகவும் மேலும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் செயல்படக்கூடும். இந்த இடத்தில் விராட் கோலியின் பங்கு மிகப் பெரியதாக அமையும்.

விராட் கோலி இந்திய டி20 அணியில் இருந்த பொழுது, இந்திய அணி சேஸ் செய்த கடைசி 19 ஆட்டங்களில் 17 ஆட்டங்களை வென்றிருக்கிறது. இலக்கைத் துரத்தும் பொழுது உங்கள் மனதுக்குள் ஒரு கணக்கு உருவாகும். இதில் மிகச்சிறந்தவராக இருப்பதால்தான் விராட் கோலி சேஸ் மாஸ்டர் எனப்படுகிறார். அவர் பேட்டிங்கில் நல்ல இண்டெண்ட் காட்டுவார். அவர் களத்தில் நின்றால் இந்திய அணியால் 230 ரன்கள் எடுக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!