“இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ் முடியட்டும்.. இந்த இந்திய வீரர் லெவலே மாறப்போகுது” – கவாஸ்கர் கருத்து

0
557
Gavaskar

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது.

பொதுவாக ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானம் வழக்கமான இந்திய டெஸ்ட் சுழல் ஆடுகளங்கள் போல இருக்காது. அங்கு பந்தின் சுழற்சி அளவில் கட்டுப்பாடு இருக்கும். எனவே முதல் நாளிலிருந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரிய தொந்தரவு உருவாகாது.

- Advertisement -

இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் அங்கு மிக அதிகமாக இருக்கின்றன. சுழற்சி அதிகம் இருக்காது என்பதால் ஆரம்ப கட்டத்தில் பேட்ஸ்மேன் ரன்கள் குவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

இங்கிலாந்து அணி சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குதல் பாணி பேட்டிங்கை அமைத்து வெற்றிகரமாக விளையாடுகிறது. எனவே இங்கிலாந்து இந்த முறையும் இந்தியாவுக்கு எதிராக குறிப்பாக ஹைதராபாத் மைதானத்தில் இதை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எனவே இந்த விஷயத்தில் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக இருக்கும் பொழுது, எந்த மாதிரி பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறார் மற்றும் எப்படியான ஃபீல்டிங் செட்டப் வைக்கிறார் என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கும். மேலும் அவருக்கு அது சவாலானதாக இருக்கும்.

இதுகுறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் ஹோம் கண்டிஷனில் பேட்டிங்கில் சீக்கிரம் செட்டில் ஆவார். இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் தன்னை முழுமையாக நிலை நிறுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். அவர் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்பு ஆடுகளம் மற்றும் சூழ்நிலையை சரியாக உணர்ந்து ஷாட் மேக்கிங் அருமையாக அமைத்தார். அவர் ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன். மேலும் உலக கோப்பையில் செய்ததை அப்படியே கொண்டு வருவார் என்று நம்புகிறேன்.

கேப்டனாக ரோஹித் சர்மா தன்னுடைய பந்துவீச்சாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக ஹைதராபாத் ஆடுகளத்தில் பந்தில் பெரிய சுழற்சி இருக்காது. எனவே இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து மதிய உணவு இடைவேளை வரையில் நல்ல தொடக்கத்தைப் பெற்றால், ரோகித் சர்மா தனது பந்துவீச்சாளர்களை அப்பொழுது எப்படி பயன்படுத்துகிறார் என்று பார்க்க வேண்டும். அவரை அந்த இடத்தில் ஜட்ஜ் செய்ய வேண்டும்.

முன்பு இங்கிலாந்து இந்தியாவிற்கு டெஸ்ட் தொடர் விளையாட வந்த பொழுது, சென்னை டெஸ்டில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர் காட்டினார். இந்த முறையும் அவர் அதேபோல் பேட்டிங் செய்தால், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு வேலை எளிதாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -