ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போயும் அவ்வளவாக தெரிந்திராத 5 வீரர்கள்

0
196
Tymal Mills and Tyron Henderson IPL

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதுதான். ஐபிஎல் தொடர் பிசிசிஐ நடத்துவதற்கு முன்பாக கூறிய ஒரு விஷயம் இந்த தொடர் நடத்துவதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு இது ஒரு நல்ல அடித்தளமாக அமையும்.

இதில் நன்றாக விளையாடினால் நிச்சயமாக வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை அவர்கள் பெறுவார்கள் என்று கூறியது. பிசிசிஐ கொடுத்த வாக்கை தற்போது வரை காப்பாற்றி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பல இளம் வீரர்களை தற்பொழுது இந்திய அணியில் பிசிசிஐ இணைத்து அவர்களை பெரிய வீரர்களாக வலம் வர வைத்துள்ளது.

அப்படிப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போய், நீங்கள் அவ்வளவாக அறிந்திராத வீரர்களைப் பற்றி தற்பொழுது பார்ப்போம்.

ஏக்லவியா திவெடி

Ekalavya-Dwivedi

எப்பொழுதும் ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏனென்றால் ஒவ்வொரு அணியும் விக்கெட் கீப்பிங் செய்வதற்காக ஒரு வெளிநாட்டு வீரர்கள் விளையாட வைக்க விரும்பாதது எனவே முடிந்தவரை ஒரு இந்திய வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தனது அணியில் எப்பொழுதும் விளையாட வைக்க ஆசைப்படும்.

அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டு குஜராத் அணியில் இவரை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. மிக இளம் வீரரான இவருக்கு அப்பொழுது ஒரு கோடி ரூபாய் என்பது அதிக தொகை தான். இருப்பினும் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இவரால் அவ்வளவு சிறப்பாக பங்களிக்க முடியாமல் போனது. குஜராத் அணிக்காக வெறும் நான்கு போட்டிகளில் மொத்தமாக 24 ரன்கள் மட்டும் தான் குவித்தார். அதன் பின்னர் தற்பொழுது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாத்து சிங்

nathu singh ipl

இவர் ஒவ்வொரு முறை ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக பேசுபொருளாக மாறுவார். உள்ளூர் ஆட்டங்களில் இவர் மிக அற்புதமாக பந்து வீசுவது தான் அதற்கு காரணம். அந்த அளவுக்கு வேகமாக பந்து வீச கூடிய ஒரு திறமைவாய்ந்த வீரர் இவர். எனவே இவரை ஒவ்வொரு அணியும் வாங்க முயற்சிக்கும்.

அதன்படி 2016ம் ஆண்டு இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 கோடி ரூபாயை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே அந்த ஆண்டு தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இவர் 2017 ஆம் ஆண்டு குஜராத் அணியில் விளையாடினார். இறுதியாக 2018 மட்டும் 2019ஆம் ஆண்டு களில் டெல்லி அணிக்காக விளையாடி அதன் பின்னர் தற்பொழுது வரை எந்த அணியிலும் பங்கு பெறாமல் உள்ளார்.

டிமால் மில்ஸ்

இவரது பெயரைக் கேட்டதும் அனைத்து பெங்களூரு ரசிகர்களுக்கும் இவரை நன்றாக ஞாபகம் இருக்கும். 2017 ஆம் ஆண்டு இவரை 12 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.

ஸ்டார்க்குக்கு பதிலாக இவர் பெங்களூர் அணிக்கு கை கொடுப்பார் என நம்பி இவரை பெங்களூரு அணி நிர்வாகம் அவ்வளவு தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டு அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அந்த ஆண்டு புள்ளி பட்டியலில் பெங்களூர் அணி கடைசி இடத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

டைரன் ஹெண்டர்சன்

இவரது பெயரை அவ்வளவாக அனைவரும் கேட்டிருக்க மாட்டார்கள். 2009 ஐபிஎல் தொடர் பார்த்தவர்களுக்கு இவரை நன்றாக ஞாபகம் இருக்கும். 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காரணத்தினால் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் அந்த அணி தேடியது.

இவர் நிச்சயமாக அணைக்கு கை கொடுப்பார் என்று நம்பி நான்கு கோடி ரூபாய்க்கு இவரை ஏலம் எடுத்தது. இவர்தான் அடுத்த ஆண்ட்ரூ பிளின்டாப் என கூறும் அளவுக்கு செயல்படுவார் என நம்பி அவரை அந்த அணி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெறும் 11 ரன்கள் மட்டும் குவித்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் தான் கைப்பற்றினார்.

ரிஷி தவான்

2014 ஆம் ஆண்டு இரஞ்சி டிராபி தொடரில் இவர் மிக சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வழங்கினார். அதன் காரணமாக இவரை பஞ்சாப் அணி 3 கோடி ரூபாய்க்கு அந்த ஆண்டு ஏலம் எடுத்தது. இவரும் அந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசினார். மொத்தமாக 14 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி பேட்டிங்கில் 82 ரன்கள் குவித்தார். ஆனால் அதற்குப் பின்னர், தற்பொழுது வரை மொத்தமாகவே இவர் 7 போட்டிகளில் மட்டும்தான் விளையாடியுள்ளார்.