கடந்த முறை இங்கு வந்தபோது நல்ல பதிலையே கொடுத்தோம் ; – தென் ஆப்பிரிக்க கேப்டன் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

0
216
Bavuma

ஆஸ்திரேலியா அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது. இதன் முதல் போட்டி கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று மாலை நடக்க இருக்கிறது.

இதற்கு முன்பு இந்த ஆண்டு ஐபிஎல் முடிந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்திருந்தது. அந்தத் தொடரில் இந்திய அணியில் மிக முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்தத் தொடர் 2-2 என சமநிலையில் இருந்தபோது, பெங்களூரில் நடக்க இருந்த கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

தற்போது தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவும் இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கு முன்னாள் பத்திரிக்கையாளர்களை எதிர்கொண்டு தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசியிருக்கிறார். மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் இவர் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா
” எனது கவனம் எனது அணி மீது உள்ளது. எனக்கு கேப்டனாக அணியில் ஒரு பங்கு உள்ளது. அதை அணியை வழிநடத்தி செய்யும் சேவையாகும். மேலும் எனது கவனம் உலகக் கோப்பையில் உள்ளது. அங்கு போக நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். அணிக்காக மற்ற எல்லாவற்றிலும் நான் அதிக கவனத்தை, ஆற்றலை கொடுக்க முயற்சி செய்கிறேன். நான் அணிக்கு என்னால் முடிந்த சேவையை கட்டாயம் செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய தென்ஆப்பிரிக்க கேப்டன் ” அந்தப் பெரிய உலக கோப்பை தொடருக்கு இன்னும் எங்கள் தோழர்கள் சிறந்த நிலையில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். மற்ற எல்லா கவனச் சிதறல்கள் மற்றும் வேறு நிகழ்வுகளை நான் தனிப்பட்ட முறையில் கையாள்வேன். நான் அணியும் சட்டையை அணிந்து இருக்கும் வரை, அது எனது அணிக்கு நான் சேவை செய்வதற்கே ஆகும் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசியவர் “வெளிப்படையாகச் சொன்னால் இந்திய அணியில் மிகப்பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சமீப வெற்றியிலிருந்து மிக உத்வேகத்துடன் இந்த தொடருக்கு வருவார்கள் என்று நாங்கள் உணர்கிறோம். மேலும் அந்த அணியில் இரண்டு மூன்று எக்ஸ் ஃபேக்டர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொடர் நன்றாக இருக்கும் போட்டி தன்மை வாய்ந்ததாக இருக்கும். கடந்த முறை ஜூலை மாதம் நாங்கள் இங்கு எல்லா விதத்திலும் பரிசோதிக்கப்பட்டோம். அப்பொழுது நாங்கள் அதற்கு சரியான பதிலையே தந்தோம் என்று நினைக்கிறேன் ” என்றும் கூறியிருக்கிறார்.