கடைசி 10 ஓவர்.. 143 ரன்.. 38 ஃபோர்.. 13 சிக்ஸ்.. இங்கிலாந்தை புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்கா.. உலக கோப்பையில் உச்சகட்ட அதிரடி!

0
1335
England

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவுக்காக பின்பு இங்கிலாந்து அணி வருத்தப்படும்படி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சரவெடியாய் வெடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் நான்கு ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்றைய ஆட்டத்தில் கேப்டன் டெம்பா பவுமா விளையாடாததால் இடம்பெற்ற ரீசா ஹென்றிக்ஸ் 74 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார்.

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த வாண்டர் டெசன் 61 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 44 பந்துகளில் 42 ரன்கள், டேவிட் மில்லர் 6 பந்தில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

அப்போது தென் ஆப்பிரிக்க அணி 36.3 ஓவரில் 243 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு அடுத்து கடைசி பேட்டிங் பாட்னர்களாக ஹென்றி கிளாசன் மற்றும் மார்க்கோ யான்சன் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி மெல்ல மெல்லமாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளி, யாரும் எதிர்பார்க்காத டோட்டலுக்கு தென்னாப்பிரிக்க அணியை கொண்டு சென்றார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய ஹென்றி கிளாசன் 61 பந்துகளில் அதிரடி சதம் அடித்து மிரட்டினார். அவர் 67 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 109 ரன்கள் குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்க்கோ யான்சன் அதிரடியாக 42 பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். இந்த ஜோடி அதிரடியாக 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 399 ரன்கள் குவித்து இருக்கிறது. ரீஸ் டாப்லீ மூன்று விக்கெட், அட்கிஸ்டன் ஆதில் ரசித் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி கடைசி பத்து ஓவர்களில் 143 ரன்கள் குவித்து இருக்கிறது. குறிப்பாக கடைசி ஐந்து ஓவரில் 84 ரன்கள் அடித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக ஆட்டத்தின் முதல் பகுதியில் 38 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன.