214 ரன்ஸ்.. 18.3 ஓவர்.. தென் ஆப்பிரிக்கா அதிரடி சேஸ்.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி தோல்வி

0
3113

உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட்ஸ் 2024 டி20 தொடரில் 13வது போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி நிர்ணயத்த 210 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா சாம்பியன் அணி 18 ஓவர்களிலேயே வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

நார்த்தாம்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் 13 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சர்ஜில் கான் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய மகசூத் 24 ரன்களும், அப்ரிடி 20 ரன்கள், சோயப் மாலிக் 26 பந்துகளில் 51 ரன்களும், அப்துல் ரசாக் 15 பந்துகளில் 25 ரன்களும் குவித்தனர். இதில் ஓரளவு சிறப்பாக பந்துவீசி ரன்களை குறைந்த அளவில் கட்டுப்படுத்திய ஸ்டெயின் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். அதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான தென்னாப்பிரிக்காவின் ஜீன் பால் டுமினி ஒன்பது ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்னிமன் 47 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என 82 ரன்கள் குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த மூன்றாவது வரிசையில் களமிறங்கிய சரீல் ஏர்வி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

57 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சர்வீ 11 பௌண்டரிகளையும் ஆறு சிக்ஸர்களையும் விளாசி 105 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணையின் வெற்றியை உறுதி செய்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்ததால் தென்னாபிரிக்க அணி 18.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இதையும் படிங்க:ஹோட்டலுக்கு கூப்பிட்டு.. அந்த 3 பேர் ஓய்வு பெற சொன்னாங்க.. ஒரே காரணத்துக்காக மன்னிச்சிட்டேன் – உண்மையை உடைத்த ஆண்டர்சன்

இந்த போட்டியின் மூலம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு முதல் தோல்வியும், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகவும் அமைந்திருக்கிறது. மூன்று தோல்விகளுக்குப் பிறகு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிக்கு இது முதல் வெற்றி. நான்கு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.