சஞ்சு சாம்சன் தப்பு செஞ்சிருக்காரு.. ஆனா அதுக்கு காரணம் கம்பீர் முடிவுதான்.. இனி அது வேண்டாம் – பாலாஜி வேண்டுகோள்

0
12
Sanju

இந்தியா மற்றும் தமிழ்நாட்டு முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி சஞ்சு சாம்சனுக்கு இனி தொடர்ந்து என்ன மாதிரியான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உருவாகி உள்ளது.

- Advertisement -

இடையில் ஏற்பட்ட குளறுபடிகள்

இந்திய தேர்வுக்குழு ஏற்கனவே சுப்மன் இல்லை இந்திய டி20 தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு தேர்வு செய்து வைத்திருந்தது. மேலும் அவரையே எதிர்காலத்திற்கு கேப்டனாகவும் கொண்டுவர முடிவு செய்திருந்தது. அப்போது நிறைய டெஸ்ட் தொடர்கள் இருந்ததால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதை பயன்படுத்திக் கொண்ட அவர் மூன்று சதங்கள் அடித்தார். ஆனால் மீண்டும் கில் வந்ததும் சஞ்சு சாம்சன் தொடக்க இடத்திலிருந்து மிடில் ஆர்டர் அனுப்பப்பட்டார். இது அவருடைய பேட்டிங் ஃபார்மில் பெரிய சரிவை உண்டாக்கி விட்டது. இதன் காரணமாக அவர் பிளேயிங் லெவனில் இல்லாமலேயே போய்விட்டார். இதற்கு நடுவில் கில்லும் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த குழப்பம் வேண்டாம்

இதுகுறித்து லட்சுமிபதி பாலாஜி பேசும்பொழுது ” ஆஸ்திரேலிய டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டார். அந்த இடம் அவருக்கு சரியானதாகவே இல்லை. ஐபிஎல் தொடரில் பார்த்திருக்கிறோம் மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அவர் மேல் வரிசையில் வந்துதான் சதங்கள் அடித்தார். அவரைப் போன்ற ஒரு பவர் ஹிட்டருக்கு தலைமைத்துவ குழுவில் குழப்பம் வந்த இடம் இதுதான். இதனால் வீரரும் குழப்பம் அடைவார்”

இதையும் படிங்க : சாம்சன் தன் கதை முடிந்தது என்று நினைத்திருப்பார்.. ஆனால் இந்த ஆச்சரியங்கள் பின்னாடி நடந்தது – மைக்கேல் கிளார்க் பேச்சு

“சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரையில் அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். தொடர்ந்து அவரை அந்த இடத்திலேயே விளையாட வைக்க வேண்டும். இந்த புள்ளியில் தான் இந்திய தலைமைத்துவ குழு ஒரு தவறு செய்து விட்டதாக நான் நினைக்கிறேன். சஞ்சு சாம்சனும் தவறுகள் செய்திருக்கிறார். ஆனால் அதற்கு முக்கிய காரணம் அவரை பேட்டிங் ஆர்டரில் கீழே இறக்கியதுதான். இனி இப்படி நடக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -