இந்நேரம் இந்தியா-பாகிஸ்தான் பைனல் நடந்துருக்கும்; இந்த தப்பை மட்டும் இந்தியா பண்ணாம இருந்துருந்தா..! – பாகிஸ்தான் கோச் மேத்தியூ ஹைடன் பேட்டி!

0
1155

அரை இறுதி போட்டியில் இந்திய அணி இதைச் செய்ய தவறிவிட்டது என்று பேட்டியளித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் கோச் மேத்தியூ ஹைடன்.

அடிலேய்டு மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து இந்திய அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. சூப்பர் 12 சுற்றின் ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்ற பலத்துடன் அரையிறுதி போட்டிக்கு சென்றது. ஆனால் இங்கிலாந்திடம் அப்படியே சரணடைந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் இத்தகைய படுதோல்விக்கு முக்கிய காரணம் சிறப்பாக துவக்கம் அமையவில்லை. அதாவது கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தொடர்ந்து சோதப்பி வந்தது. அடுத்ததாக பந்துவீச்சில் மூத்த வீரர்கள் சமி, புவி மற்றும் அஸ்வின் ஆகியோர் சரியான தருணத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தாதது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் உண்மையில் இந்திய அணி எந்த இடத்தில் பின்தங்கியது? தோல்விக்கு எது முக்கிய காரணம்? என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருமான மேத்தியூ ஹைடன். அவர் கூறியதாவது:

“இந்திய அணி சரியாக லெக்-ஸ்பின்னரை, அதாவது ஆறாவது பந்துவீச்சை பயன்படுத்தப்படவில்லை. அந்த இடத்தில் தான் பின்தங்கிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியில் ஆறு பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஏழாவது பந்துவீச்சாளராக இப்திகர் அகமது இருக்கிறார். ஆகையால் அனைத்து இடங்களிலும் நாங்கள் சரி செய்து விட்டோம். அந்த வகையில் தற்போது இந்தியாவை விட பாகிஸ்தான் நன்றாக இருக்கிறது.”

- Advertisement -

“மிகப்பெரிய தொடரில் பாகிஸ்தான் அணி சந்திக்காத விமர்சனங்களே இல்லை. ஆனால் அனைத்திற்கும் நாங்கள் செவிமடுத்து, அதனை சரி செய்து வருகிறோம். வெற்றி தோல்வி இரண்டையும் நாங்கள் முற்றிலுமாக என்ஜாய் செய்கிறோம். இதுதான் பாகிஸ்தான் அணியின் பலமாக நான் பார்க்கிறேன்.

வீரர்கள் முழு மனதுடன் தங்களது முழு பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். மேலும் கிரிக்கெட்டை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்கள் இந்நாட்டில் இருப்பது இன்னும் அதிக அளவில் செயல்படுவதற்கு ஆற்றலை கொடுக்கிறது.” என்றும் அவர் பேசினார்.

- Advertisement -