2022 ஐ.பி.எல் ஏலத்தில் பெங்களூர் வீரர் ஜேமிசன் கலந்து கொள்ளாமல் போவதற்கு இதுதான் காரணம்

0
185
Kyle Jamieson

ஐபிஎல் தொடர் தற்போது ஏலத்திற்காக தயாராகி வருகிறது. வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் இந்த முறை ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முன்னதாக ஏற்கனவே இருந்த அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கொடுத்தது. புதிதாக இணைந்த இரண்டு அணிகளும் ஏலத்திற்கு முன்னதாகவே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. இந்த வேலைகள் எல்லாம் சிறப்பாக முடித்து தற்போது ஏலத்திற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.

வார்னர், பேர்ஸ்டோ, ரபாடா போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்திற்கு தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். இவர்களை எடுக்க ஒவ்வொரு அணிகளும் நிச்சயமாகக் கடும் போட்டி போடும். வெளிநாட்டு வீரர்களுடன் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ், ஷமி போன்றோரும் ஏரத்தில் தங்களது பெயரை கொடுத்துள்ளனர். ஆனால் இந்த முறை ஏலத்திற்கு பல முன்னணி வீரர்களும் தங்களது பெயரினை கொடுக்காமல் விட்டுள்ளனர்.

- Advertisement -

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர், கெயில் ஆகியோர் இந்த முறை ஏலத்திற்கு தங்களது பெயரை பதிவு செய்யவில்லை. அதேபோல கடந்த ஐபிஎல் தொடரில் ஏலத்தில் அதிக விலைக்கு சென்ற மற்றொரு முன்னணி நியூஸிலாந்து வீரரும் தனது பெயரை பதிவு செய்யவில்லை. கடந்த முறை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கைல் ஜெமிசன் பெங்களூர் அணிக்காக விளையாடினார். சுமார் 15 கோடி ரூபாய்க்கு இவ்வளவு போட்டி போட்டு பெங்களூரு நிர்வாகம் வாங்கியது.

இது குறித்து அவர் பேசும்போது தான் கடந்த ஒரு வருடமாகவே கிட்டத்தட்ட கொரோனா விதிமுறைகளால் குடும்பத்துடன் இல்லை என்றும் அதனால் வருகிற ஆறு அல்லது எட்டு வாரங்களில் தான் குடும்பத்துடன் செலவு செய்ய நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கிரிக்கெட் விளையாடி வருவதாகவும் தன்னுடைய விளையாட்டை இன்னமும் மேம்படுத்த தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். நியூசிலாந்து அணிக்காக இவர் மூன்று வகை கிரிக்கெட்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றார். மேலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டி20 உலக கோப்பை தொடரிலும் நியூசிலாந்து சார்பாக இவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -