தமிழ்நாட்டு வீரர்களை வைத்து கம்பீர் ஆடிய வினோத ஆட்டம்.. கும்ப்ளே ஆச்சரியம்.. இனி இது தொடருமா?

0
83
Gambhir

இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர் கம்பீர் செய்திருக்கும் மாற்றம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

- Advertisement -

கம்பீர் வினோத ஆட்டம்

இன்றைய போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் யாதவ் என நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை கம்பீர் வைத்திருக்கிறார். இந்த மைதானத்திற்கு இவ்வளவு ஸ்பின்னர்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பேட்டிங் வரிசையில் சாய் சுதர்சனை அணியில் இருந்து தூக்கி விட்டு, அவரது இடத்தை அப்படியே வாஷிங்டன் சுந்தருக்கு கொடுத்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடம் பேட்டிங் வரிசையில் மிகவும் முக்கியமானது. ஆனால் அதை ஒரு முழுமையான பேட்ஸ்மேனுக்கு கொடுக்காமல் ஆல்ரவுண்டருக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். வளரும் வீரரான சாய் சுதர்சனுக்கு வாய்ப்பை நிறுத்தியது அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

கும்ப்ளே ஆச்சரியம்

இதுகுறித்து பேசி உள்ள அனில் கும்ப்ளே கூறும் பொழுது ” எனக்கு இந்த அணி வரிசையை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது சாய் சுதர்சனின் மூன்றாவது இடத்தில் யாரை விளையாட வைப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அந்த இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை வைத்திருக்கிறார்கள். இது பெரிய ஆச்சரியமான விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஜடேஜாவை கேப்டனா ஆக்குனா.. அந்தப் பையன் ஏமாந்து ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறுவார் – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

தற்போது இந்தியாவில் விளையாடும் பொழுது மூன்றாவது இடத்தை வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்கலாம். ஆனால் அவரையே தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு பயன்படுத்த முடியுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. அக்சர் படேல் விளையாடும் இடத்தை சாய் சுதர்சனுக்கு கொடுத்து இருக்கலாம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -