ஆசிய கோப்பையில் 7 விக்கெட்.. ஆனா இங்கிலாந்து டெஸ்ட்ல வாய்ப்பே கிடைக்காமல் போக இதுதான் காரணம் – குல்தீப் யாதவ் வெளிப்படை

0
13

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில் அதில் விளையாடி வரும் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

எட்டு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் பாகிஸ்தான் மற்றும் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில் மொத்தமாக 7 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் அவர், இதற்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இந்திய அணியில் அனைத்து ஃபார்மெட்டிலும் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக ஒருவர் இருக்கும் நிலையில் அவருக்கான இடம் மறுக்கப்பட்டது குறித்து குல்தீப் யாதவ் அது குறித்து சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கும் அணிக்கும் தொடர்பு எளிதாக இருந்தது. சில நேரங்களில் நான் விளையாட முடியும் என்று உணர்ந்தேன் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பேட்டிங் ஆழம் அல்லது சேர்க்கைகள் காரணமாக எனக்கு விளையாடும் அணியில் இடம் கிடைக்காமல் போனது. அப்போது பயிற்சியாளர் கௌதம் பாய் அது குறித்து என்னிடம் நேரடியாகவே பேசினார். இது நிச்சயமாக திறமை அல்லது பேட்டிங் குறித்து எதுவும் கிடையாது.

இதையும் படிங்க:403-4.. ஆஸிக்கு எதிராக ஜுரல் மிரட்டல் அடி.. கம்பீருக்கு கிடைக்கும் புது ஐடியா.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாறுமா?

இது முற்றிலும் சூழ்நிலை மற்றும் அணி அமைப்பை பற்றிய விஷயமாகும். நான் என் நேரத்தை ரசித்தேன், விளையாடாமல் இருந்த நிலையில் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். விளையாடாமல் இருக்கும்போது நீங்கள் கவனிப்பதன் மூலமாக மேலும் கற்றுக்கொண்டு சிறந்த வீரராக மாறுவீர்கள். மற்றவர்களை குறை கூறுவது எளிது ஆனால் உங்களது பலவீனங்களை சரி செய்து கொண்டு நீங்கள் மேம்பட்ட வீரராக முன்னேறுவது கடினம்” என்று அவர் பேசி இருக்கிறார்

- Advertisement -