உடனே ஹர்திக் பாண்டியாவுக்கு போன் பண்ணி அதை சொன்னேன்.. என்னோட பலமே இதுதான் – குருனால் பாண்டியா பேச்சு

0
428
Krunal

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் இறுதிப் போட்டியில் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட் கைப்பற்றி வெறும் 16 ரன் மட்டுமே தந்து ஆர்சிவி முதல் முறையாக கோப்பையை வெல்ல குருனால் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டி குறித்து மனம் திறந்து அவர் பேசியிருக்கிறார்.

முதன் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரை ஆரம்பித்து, அதற்கு அடுத்து லக்னோ அணிக்கு வந்து தற்பொழுது ஆர்சிபி அணியின் மிக முக்கியமான வீரராக மாறி இருக்கிறார். நடந்து முடிந்த மெகா ஏலத்தில் ஆர் சி பி வாங்கிய சிறந்த வீரர் அவர்தான் என்று நிர்வாகமே சொல்லும் அளவுக்கு அவருடைய வளர்ச்சி அமைந்திருக்கிறது.

- Advertisement -

என்னுடைய திட்டம் இதுதான்

நேற்றைய போட்டி குறித்து பேசி இருக்கும் குருனால் பாண்டியா கூறும் பொழுது ” நாங்கள் பேட்டிங் செய்து கொண்டு இருந்த பொழுது நான் வெளியே இருந்து பார்த்ததில் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருப்பது தெரிந்தது. எனவே இந்த ஆடுகளத்தில் வேகத்தை மாற்றி கொஞ்சம் மெதுவாக வீச முடியும் பொழுது, என்னால் வாய்ப்புகளை உருவாக்குவதோடு விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியும் என நன்றாக உணர்ந்தேன்”

“ஆனால் இந்த வடிவ கிரிக்கெட்டில் தவறுகளுக்கு இடம் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே உங்களுக்கு இப்படியான முறையில் பந்து வீசுவதற்கு அதிகபட்ச தைரியம் வேண்டும். சூழ்நிலைக்கு என்ன தேவை என உடனுக்குடன் கற்றுக் கொள்வதே என்னுடைய மிகப்பெரிய பலமாக இருந்து வந்திருக்கிறது. நான் எப்பொழுதும் என்னுடைய உள்ளுணர்வை ஆதரித்து வந்திருக்கிறேன்”

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவுக்கு போன் செய்தேன்

“எனவே இந்த ஆடுகளத்தில் இரண்டு விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்றால் தைரியமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். இந்த ஆடுகளத்தில் நான் கொஞ்சம் வேகமாக பந்து வீசி இருந்தால் இது பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளமாக தெரிந்திருக்கும். ஆனால் நான் வேகத்தை மாற்றி கொஞ்சம் மெதுவாக வீசியதால் எனக்கு சாதகம் கிடைத்தது. முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல உதவி கிடைத்தது”

இதையும் படிங்க : மூணு பேரும் எல்லாத்தையும் கொடுத்து ஆடினப்ப கை கூடல.. இந்த சீசனை மறக்க மாட்டேன் – விராட் கோலி உருக்கமான பேச்சு

“நான் ஆர்சிபி அணியில் சேர்ந்ததும் எனக்கு கோப்பைகளை வெல்வது மிகவும் பிடிக்கும் என்று கூறினேன். மூன்றரை மாதங்களுக்கு முன்னால் நான் சொன்னதை இப்பொழுது செய்ய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஐபிஎல் தொடருக்கு வந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை கோப்பையை வென்றிருக்கிறேன். தற்போது எங்களுடைய வீட்டில் என் தம்பியின் கோப்பைகளையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கோப்பைகள் இருக்கிறது. நான் உடனே ஹர்திக் பாண்டியாவுக்கு போன் செய்து இந்த விஷயத்தை சொன்னேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -