தம்பியை ஆட்டமிழக்கச் செய்த அண்ணன் ; க்ருனால் பாண்டியா என் விக்கெட்டை வீழ்தியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி – ஹர்திக் பாண்டியா

0
163
Hardik Pandya and Krunal Pandya

ஐ.பி.எல்-லை பொறுத்தவரை ஆட்டங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஆட்டங்களில் பாம்பும் கீரியுமான வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறுவது, ஒரே அணியில் சிறந்த நண்பர்களாக இருந்த வீரர்கள் எதிரெதிர் அணிகளில் மோதுவது, ஒரே தேசிய அணி வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பிரிந்து களத்தில் சிலநேரங்களில் முறைத்துக்கொள்வதென வேறுபல சுவாரசியங்களும் அதிகம்.

பங்களாதேசிற்கு எதிரான ஆட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட மேன் ஆப் தி மேட்ச் விருதை, அதே ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் விராட்கோலியை ஊக்கப்படுத்தும் விதமாக பகிர்ந்து கொண்ட கம்பீரும், பெற்றுக்கொண்ட விராட்கோலியும், ஐ.பி.எல் ஆட்டக்களத்தில் முறைத்துக்கொண்டது.

- Advertisement -

தென்-ஆப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாது பள்ளிக்கால நண்பர்களான டிவிலியர்சும் டூ பிளிசிசும் பிரிந்து பெங்களூர் சென்னை அணிகளுக்காக எதிர்த்து விளையாடி வீழ்த்திக்கொண்டது. தன் அணியின், உலகின் அதிசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் ஓவரை அனாசயமாக அடித்துவிட்டு அவரிடம் அதற்காக டிவிலியர்ஸ் ஸாரி சொன்னது. அண்ணன் தம்பியான மைக் ஹஸ்சியும், டேவிட் ஹஸ்சியும் சென்னை, கொல்கத்தா அணிகளுக்காகப் பிரிந்து களத்தில் உத்வேகமான கிரிக்கெட்டை தந்தது என நிறைய இப்படியான ஐ.பி.எல் தொடரின் சுவாரசியமான சம்பவங்களைச் சொல்லலாம்.

இன்று அப்படியொரு சுவாரசியமான சம்பவம்தான் லக்னோ குஜராத் அணிகள் மோதிய போட்டியில் நடந்தது. லக்னோ அணியின் வீரர் க்ரூணால் பாண்ட்யா. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. இருவரும் அண்ணன் தம்பி என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனால் இன்றைய போட்டியில் தன் அணிக்காக அண்ணன் க்ரூணால் பாண்ட்யா காட்டிய ஆவேசம் அதிகம். அதுமட்டுமல்லாமல் தன் தம்பி ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டையும் அவரே கைப்பற்றினார்.

ஆனால் இறுதியில் போட்டியில் வென்றது தம்பி ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணிதான். குஜராத் வெற்றிக்குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசுகையில், இதுக்குறித்து கேட்கப்பட்ட பொழுது “க்ரூணால் என் விக்கெட்டை வீழ்த்தினார். நான் ஆட்டத்தை ஜெயித்திருக்கிறேன். அதனால் எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி” என்று சிரித்தவாறு குறிப்பிட்டார்!

- Advertisement -