கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இருப்பினும் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர் வைபவ் அதிகபட்சமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்சர் என 103 ரன்கள் குவித்து தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் அவருடைய அதிரடி ஆட்டம் பெரிதாக பேசப்பட்டது.
தன்னுடைய 15 வயதில் உலகின் சிறந்த பவுலர்களை அடித்து நொறுக்கும் ஆட்டத்திறன் குறித்து பல முன்னாள் வீரர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு படி மேலே சென்று சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகின் கடவுள் என்றால் இவர் உப கடவுள் என்று பாராட்டி பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால் இவன் ஒரு நாள் கிரிக்கெட்டின் உபகடவுளாக உருவெடுப்பான். 15 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதை இவன் தொடர்ந்து நிகழ்த்தி காட்டி வருகிறான். மேலும் இவன் சீரான செயல்பாடு கொண்டவனாக இருக்கிறான். ஒரு போட்டியில் ஐந்து முதல் ஆறு ஓவர்களில் போட்டியை முடித்துக் கொடுக்கும் வல்லமை படைத்தவனாக உள்ளான். இவரது பேட்டிங் மற்றும் ஆர்ச்சரின் பவுலிங் என இரண்டை மட்டுமே நம்பி ஆர்ஆர் தப்பித்து வருகிறது.
கம்மின்ஸ் உலகின் சிறந்த கேப்டன் என்பதோடு உலகக் கோப்பை வென்ற சிறந்த கேப்டன்களில் ஒருவர். எனவே அவரே இந்த சிறுவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்து நின்றார். சூரியவன்சியின் விலா எலும்புப் பகுதியை குறிவைத்து அவரை ஆட்டம் விளக்கச் செய்து விடலாம் என சண்டை கருதியது. ஆனால் அப்படி வீசப்பட்ட ஒவ்வொரு பந்தையும் அவர் பவுண்டரிக்கு அடித்து நொறுக்கினார்” என்று பேசி இருக்கிறார்.






