இந்திய டி20 அணியின் துணை கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது ஏனென்று தெரியவில்லை என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய டி20 அணிக்குள் மீண்டும் கில்லுக்கு இடம் கொடுக்கப்பட்டதில் இருந்து அணியின் சமநிலையும் செயல்பாடும் மோசமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் இல் விளையாட சிரமப்பட்டு வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 என நடப்பு சுற்றுப்பயணத்தில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இருக்கும் சுப்மன் கில் இதுவரையில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும் ஆசிய கோப்பை தொடரிலும் 7 போட்டிகளுக்கும் சேர்த்து அவர் மொத்தம் 124 ரன்கள்தான் எடுத்து இருந்தார். அவர் தொடக்க வீரராய் விளையாடுவதால் மற்ற எல்லோருக்குமே சரியான இடம் கிடைப்பதில்லை.
இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” மீதி இருக்கும் ஒன்று போட்டிகளுக்கும் அவர்கள் கில்லை கைவிட மாட்டார்கள். அவர்கள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவது கிடையாது. டி20 உலக கோப்பைக்கு அவர்தான் இந்திய அணியின் துணை கேப்டன். தற்போது இதில் உறுதியாக இருக்கிறார்கள். இது முடிவு செய்யப்பட்டு விட்டது”
எதற்கு துணை கேப்டன்?
“தற்போது அவர்கள் கில்லை வைத்து விளையாடி அணியில் சமநிலையை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி இருக்கும் பொழுது அவர்கள் எதற்காக அவருக்கு துணை கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும்? இதன் காரணமாக அணியின் சமநிலை மோசமாகிவிட்டது. அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சாம்சன், திலக் வர்மாவின் இடம் என்ன என்று கூட தெரியவில்லை”
இதையும் படிங்க : 6 விக்கெட் 156 ரன்.. ரிஷப் பண்ட் நாட் அவுட்டில் அதிரடி.. இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துமா?
“இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அது இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கிறது அதுதான். வெளியில் நடந்தால் இவர்கள் சிக்கிக் கொள்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.






