6 விக்கெட் 156 ரன்.. ரிஷப் பண்ட் நாட் அவுட்டில் அதிரடி.. இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துமா?

0
265
Rishabh

தென் ஆப்ரிக்க ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு ஆறு விக்கெட் கைவசம் இருக்க 56 ரன்கள் தேவைப்படுகிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்திருக்கிறது. இதில் காயத்தில் இருந்து திரும்பி வந்த ரிஷப் பண்ட் இந்திய ஏ அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது.

- Advertisement -

முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி சிறப்பான முறையில் விளையாடி 309 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் தனுஷ் கோட்டியன் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆயுர் மத்ரே 65, ஆயுஸ் பதோனி 38, ரிஷப் பண்ட் 17 ரன்கள் எடுத்தார்கள். இந்திய ஏ அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுப்ரேயான் 5 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் மீண்டும் தனுஷ் கோட்டியன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் சுப்மன் கில்.. கவலைப்பட வேண்டாம்.. தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கருத்து

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணிக்கு ஆயுஸ் மத்ரே 6, சாய் சுதர்சன் 12, படிக்கல் 5, ரஜத் பட்டிதார் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழத்தார்கள். ரிசப் பண்ட் 81 பந்தில் 64 ரன், ஆயுஸ் அதோனி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு விக்கெட் கைவசம் இருக்க 156 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை இந்திய அணி இதை எட்டுமா என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -