இந்திய கிரிக்கெட்

நிறைய சமையல்காரர்கள் சேர்ந்தால் உணவு நல்லா இருக்காது.. ஜாகிர் கான் சிஎஸ்கேவுக்கு வந்தது இப்படித்தான் – ஸ்ரீகாந்த் பேட்டி

​ஐபிஎல் 2027 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஹெட் கோச் ஆக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் செல்லத் தவிக்கும் சென்னை அணியின் பவுலிங் பலவீனத்தை இந்த முடிவு சரிசெய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இந்திய அணிக்கு ஒரு இந்தியன் கோச் நியமிக்கப்படுவதே சிறந்தது என்று பாராட்டிய ஸ்ரீகாந்த், சென்னை விக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரின் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த ஜாகீர் கான் வீரர்களிடம் சிறப்பாக கம்யூனிகேட் செய்யக்கூடிய ஒரு சிறந்த நபராக இருப்பார் என்று கூறினார்.

​மேலும் இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “சிஎஸ்கே அணியில் பவுலிங் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது, ஜாகீர் கான் கோச் ஆக வரும்போது இந்த பலவீனத்தை அவரால் சரிசெய்ய முடியும், சென்னை அணியில் தோனி ஏதோ ஒரு விதத்தில் நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்பதால் தோனியே பரிந்துரைத்து ஜாக்கை உள்ளே கொண்டு வந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது, அணியில் சிறிய மாற்றங்கள் செய்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் நம்மால் டாப் போர் வரை செல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “சென்னை அணிக்கு மைக் ஹஸ்ஸி, ஜாகீர் கான் மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகிய மூன்று பேரே போதுமானது, மற்ற சப்போர்ட் ஸ்டாஃப் அனைவருக்கும் பை பை சொல்லிவிடலாம், இவர்களுடன் தோனியும் இருப்பதால் இதற்கு மேல் வேறு யாரும் தேவையில்லை, அதிக சமையல்காரர்கள் சேர்ந்தால் உணவு பாழாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

​இறுதியாக ஜாகீர் கானின் குணம் குறித்து பேசும்போது “நான் ஜாகீர் கானுடன் பல கிரிக்கெட் விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறேன், அவர் மிகவும் பேலன்ஸ்டு ஆன ஒரு மனிதர், அதனால் தான் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், அவர் நிச்சயமாக ஒரு சிறந்த வேலையைச் செய்வார், சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த மிகச் சிறந்த மற்றும் பாசிடிவ் ஆன முடிவு இதுதான்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -
Published by

Recent Posts