இந்திய கிரிக்கெட்

குஜராத் அணியை பார்த்து சிஎஸ்கேவுக்கும் இந்த ஆசை வந்துருச்சு.. ஜாகிர் கான் நியமனம் குறித்து இந்திய முன்னாள் வீரர்

ஜாகீர் கான் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பந்துவீச்சாளராகவும் இருந்தவர். ஆனால் தலைமைப் பயிற்சியாளராக அவருடைய அனுபவம் எப்படி இருக்கிறது என்பதுதான் தற்போது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது. இதற்கு முன்பு 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளில் பணியாற்றிய ஜாகீர் கான், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஒரு வருடம் மென்டராகவும் இருந்துள்ளார். ஆனால் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

இந்த நிலையில், ஜாகீர் கானின் பயிற்சியாளர் அனுபவத்தைப் பொறுத்தவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார். அதேபோல், சிஎஸ்கே அணியும் இதுவரை வெளிநாட்டு தலைமைப் பயிற்சியாளர்களை நம்பியிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக இந்திய தலைமைப் பயிற்சியாளரை நியமித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆசிஷ் நெஹ்ரா பெற்ற வெற்றியை சிஎஸ்கே நிர்வாகம் கவனித்திருக்கலாம் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“ஜாகீர் ஒரு சிறந்த கிரிக்கெட்டர், சிறப்பான பந்துவீச்சாளர். ஆனால் 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளில் பணியாற்றியது மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஒரு வருடம் மென்டராக இருந்தது ஆகியவைதான் அவருடைய பயிற்சியாளர் அனுபவம். இப்போது முதல்முறையாக ஒரு ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிஎஸ்கே முதல் முறையாக இந்திய தலைமைப் பயிற்சியாளரை கொண்டு வந்துள்ளது. அவர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர் என்ற அணுகுமுறையிலிருந்து இந்திய பயிற்சியாளர் என்ற அணுகுமுறைக்கு வந்துவிட்டார்கள். குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஆசிஷ் நெஹ்ரா பெற்ற வெற்றியைப் பார்த்து, ஜாகீர் கானை நியமிப்பதன் மூலம் இதேபோன்ற மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்று சிஎஸ்கே முயற்சித்திருக்கலாம்” என்று சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts