இந்திய டெஸ்ட் அணியின் தோல்விக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீரை குறை சொல்வது நியாயமற்றது என சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதன் காரணமாக கம்பீர் திட்டங்கள் மற்றும் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதைச் செய்யக்கூடாது என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
அவரை நாம் பாராட்டினோமா?
இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கம்பீர் ஒரு பயிற்சியாளர் அவர் பயிற்சி மட்டுமே கொடுக்க முடியும். வீரர்கள்தான் சென்று விளையாட வேண்டும். இப்போது தோல்விக்கு அவரை பொறுப்பேற்றுக் கொள்ள கேட்பவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இதே ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பொழுது, அதற்கான பெருமையை நீங்கள் அவருக்கு கொடுத்தீர்களா?”
“அப்ப நீங்க அவருக்கு ஏதாவது செஞ்சீங்களா? டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு அவரை வாழ்நாள் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று சொன்னீர்களா? ஆனா நீங்க அப்படி சொல்லாத போது இப்போது மட்டும் எதற்காக அவரை தோல்விக்கு பொறுப்பாக்க பார்க்கிறீர்கள்”
இங்கிலாந்து நல்ல உதாரணம்
“இங்கிலாந்து சிவப்பு பந்து அணிக்குத்தான் மெக்கலம் முதலில் பயிற்சியாளராக வந்தார். பிறகு அவரை வெள்ளைப் பந்து அணிகளுக்கும் பயிற்சியாளராக கொண்டு வந்தார்கள். ஆனால் அவருடைய அணுகுமுறை மற்றும் திட்டங்கள் பலனளிக்க கூடிய வகையில் இல்லை. ஆனால் யாருமே அவரை மாற்றச் சொல்லிக் கேட்கவில்லை”
இதையும் படிங்க : பயிற்சியாளர் கம்பீர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?.. பிசிசிஐ தரப்பில் கசிந்த செய்தி
“ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வெற்றிக்கு நீங்கள் கம்பீரை பெருமைப்படுத்த முடியாத பொழுது, இப்போது மட்டும் நீங்கள் ஏன் அவரை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இது நியாயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






