அடிச்சு சொல்றேன்.. வாஷிங்டன் சுந்தருக்கு டி20 உகோ-ல் வாய்ப்பு தர மாட்டாங்க.. இதுதான் காரணம் – ஸ்ரீகாந்த் பேச்சு

0
160
Srikanth

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்க மாட்டார்கள் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாட வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் அவருக்கு பந்து வீச பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் தரும் வசதி

வாஷிங்டன் சுந்தர் குல்தீப் யாதவ் போல சுழல் பந்துவீச்சாளர் மட்டும் அல்லாமல் ஆல்ரவுண்டராகவும் இருப்பதால், பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தை நிரப்பக் கூடியவராக இருக்கிறார். மேலும் மூன்றாவது ஸ்பின்னர் ஆகவும் அணியில் இடம் பெற்று விடுகிறார்.

இதன் மூலம் பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் ஒரே அணியில் இடம் பெற முடியும். மூன்று தரமான ஸ்பின்னர்களும் இடம்பெற முடியும். மேலும் பேட்டிங் வரிசையும் 8 வரையில் வலிமையாக இருக்கும்.

- Advertisement -

இவர்கள் வாய்ப்பு தர மாட்டார்கள்

இது குறித்து கிருஷ்ணன்மாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “எனக்கு புரியாதது என்னவென்றால், வாஷிங்டன் சுந்தர் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர். அவர் வெறும் சுழற் பந்துவீச்சாளர் மட்டும் கிடையாது. ஏனென்றால் அவர் புனே அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடியவர். இதற்குப் பிறகு தான் சுழல் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். அவருக்கு அங்கிருந்துதான் முக்கியத்துவம் கிடைத்தது. இவரை இவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள்?”

இதையும் படிங்க : காயம் அடைந்த இந்திய வீராங்கனைக்கு கிடைக்காத பதக்கம்.. ஜெய்ஷா சொன்ன வார்த்தை.. பிரதிகா ராவல் மகிழ்ச்சி

“அவர் ஒரு பேட்ஸ்மேன் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பந்து வீசினால் மட்டும்தான் நம்பிக்கை வரும். அவர் மூன்றாவது டி20 போட்டியில் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. நான்காவது டி20 போட்டியில் 17வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். இதன் மூலம், குல்தீப் யாதவ் இந்திய மைதானங்களில் மூன்றாவது ஸ்பின்னர் ஆக வந்துவிடுவார் எனவும், எனவே வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம் பெற முடியாது எனவும் இவர்கள் சிக்னலாக நமக்கு தெரிவிக்கிறார்கள். மேலும் டி20 உலக கோப்பையில் விளையாட வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு தர மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -