பிசிசிஐ தவறு செய்து விட்டது.. நானாக இருந்தால் கோலியை விட்டிருக்க மாட்டேன்.. ஸ்ரீகாந்த் கருத்து

0
90

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எப்படி டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் விராட் கோலி, ரகானே உஜாரா போன்ற வீரர்கள் அணிக்குள் வந்து ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தார்களோ, தற்போது அதேபோல் ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்தபோது ஸ்ரீகாந்த் தான் தேர்வு குழு தலைவராக இருந்தார். தற்போது கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், “விராட் கோலி ஒரு ஸ்பெஷல் திறமை உடைய வீரர். விராட் கோலி இடம் நேர்மை, ஒழுக்கம், உழைப்பு என அனைத்தும் இருந்தது.”

- Advertisement -

கோலி மீது நம்பிக்கை இருந்தது:

“இதை பார்த்து தான், நான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய மண்ணில் பலரும் தடுமாறிய போது கோலி சதம் அடித்தார். நான் கோலியை தேர்வு செய்த போது, இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.”

“ஆனால் எனக்கு யாரும் உறுதுணையாக அப்போது இல்லை. தற்போது விராட் கோலி பல சாதனைகளை படைத்து விட்டார். தற்போது கோலி ஓய்வு பெற்று விட்டார். நான் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் கோலி, நீதான் இந்திய டெஸ்ட் அணியை தலைமை தாங்கி இருந்தாய்.”

- Advertisement -

கேப்டன் பதவியை தந்திருப்பேன்:

“தற்போது இந்திய டெஸ்ட் அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் அணியை பழைய மாதிரி கொண்டு வந்து விட்டு பின் நீ டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி செல் என்று கூறியிருப்பேன். இங்கிலாந்து தொடரில் விராட் கோலி விளையாட வைக்க தேர்வு குழுவினர் அவரை வற்புறுத்தி இருக்க வேண்டும்.”

இதையும் படிங்க: விராட் கோலி ஓய்வு.. மனம் உருகி சச்சின் நெகிழ்ச்சி.. இளம் தலைமுறைக்கு வழிக்காட்டி என பாராட்டு

“நான் அந்த இடத்தில் இருந்தால் விராட் கோலியை கேப்டனாக பொறுப்பேற்கும் படி சொல்லி இருப்பேன். அவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் கோழிக்கு ஒரு சிறந்த முடிவாக அது அமைந்திருக்கும்” என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் விராட் கோலி ஓய்வு பெற்றிருப்பதால் இங்கிலாந்து தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. குறிப்பாக கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -