சாம்சன் நீ சிஎஸ்கேவுக்கு வராதே.. இவங்க ஜடேஜாவை விட்டு பெரிய தப்பு பண்ணிட்டாங்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
59
Srikanth

ராஜஸ்தான் ராயல் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரக்கூடாது எனவும், அவர் நேரடியாக ஏலத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாக கூறியிருக்கிறார்.

அதே சமயத்தில் சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே விட்டுக் கொடுப்பது தவறான முடிவாக அமையும் எனவும் தனது விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சாம்சன் அங்கு செல்லட்டும்

ஐபிஎல் அணிகளில் இருக்கும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அந்த அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்து வருகிறார்கள் என்றும், தற்போது ஜடேஜாவை விட்டுவிட்டால் இரண்டாவது சுழல் பந்து வீச்சாளர் கூட சிஎஸ்கே அணிக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் போது ” சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாட விரும்பவில்லை என்று கூறுகிறார். அப்படி என்றால் அவர் டிரேடிங் ஆவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது நேரடியாக அவர் ஏலத்திற்கு செல்ல வேண்டும். மேலும் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் தனிப்பட்ட முறையில் மூன்றாவது இடத்தில் விளையாட முடிவு செய்யக்கூடாது. இங்கு அணியின் விருப்பம்தான் முதலில் இருக்க வேண்டும்”

- Advertisement -

ஸ்பின் ஆல் ரவுண்டர் தேவை

“ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு பேட்டிங்கில் ஒரு தூணாக இருந்திருக்கிறார். அவரை விட்டுக் கொடுப்பதால் அந்த அணியும் தோல்வியடைகிறது. உலக கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் போல வேறு யாரும் கிடையாது. அவர்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்கள். இம்பேக்ட் பிளேயர் விதி இருந்தாலும், ஒரு உண்மையான ஆல் ரவுண்டரின் தாக்கம் சிறப்பாக இருக்கும்”

இதையும் படிங்க : 299 ரன்.. கடைசி விக்கெட்டுக்கு மாஸ் காட்டிய இலங்கை.. பாகிஸ்தான் அணி சைலண்டாக முடித்தது – முதல் ஒரு நாள் போட்டி

“சிஎஸ்கே அணியில் இப்போது இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக கூட யாரும் இல்லை. ஆர்சிபியில் குர்னால், மும்பையில் ஹர்திக் பாண்டியா, டெல்லியில் அக்சர் படேல் என ஆல்ரவுண்டர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் அந்த அணிக்கு எப்படியான பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள் என்று நாம் பார்த்துள்ளோம். சிஎஸ்கே இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -