ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல் வருண் சக்கரவர்த்தியை பந்துவீச்சில் பார்த்தாலே நடுங்குவதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி மிகவும் எளிமையாக கைப்பற்றினார். கடைசி பேட்டிங் கூட்டணியை உடைத்து இந்திய அணியின் வெற்றியை அந்த நேரத்தில் உறுதி செய்தார்.
மேக்ஸ்வெல் தடுமாற்றம்
நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் மொத்தம் நான்கு பந்துகளை சந்தித்து இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சை கணிக்க முடியாமல் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். நேற்று அவர் பந்து வீசவும் செய்யவில்லை. அவருடைய பேட்டிங் மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது.
மேக்ஸ்வெல் களத்தில் இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக வருண் சக்கரவர்த்தியின் கடைசி ஓவரை இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மீச வைத்தார். அவர் நினைத்தது போலவே வருண் சக்கரவர்த்தியின் அந்த ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்து வெளியேறினார். அத்துடன் ஆஸ்திரேலியா அணியில் வெற்றி வாய்ப்பும் முடிவுக்கு வந்தது.
மேக்ஸ்வெல் பயப்படுகிறார்
இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்பொழுது எல்லாம் மேக்ஸ்வெல் பயந்து நடுங்குகிறார். வருண் சக்கரவர்த்தி சில பேட்ஸ்மேன்களை முயல் போல் சாதாரணமாக பிடித்து விடுவார். குறிப்பாக மேக்வெல்லை பார்க்கும்பொழுது அவர் ஒரு கேக் துண்டு போல முழுங்கி விடுகிறார்”
இதையும் படிங்க : 269 ரன்.. பாபரின் திருவிளையாடல்.. விண்டேஜ் குயிண்டனின் வேற மாதிரி சதம்.. பாகிஸ்தான் பரிதாப தோல்வி
“டி20 உலக கோப்பை நெருங்கி வருவதால் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு சூரிய குமாருக்கு அதிக நேரம் கிடையாது. அவரை பேட்டிக்கு வரிசையில் அங்கு இங்குமாக அலைய வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அவர் சீக்கரத்தில் தன்னுடைய இடத்தில் தொடர்ந்து விளையாடி நிலைநிறுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.






